• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் கைது: இந்தியா குறித்து கவலை தெரிவித்த ஐ.நா…. | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் கைது: இந்தியா குறித்து கவலை தெரிவித்த ஐ.நா…. | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துடெல்லி,டெல்லி போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கானோர் கைது
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி புதுடெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெறவிருந்த போராட்டத்தில் மக்கள் பங்கேற்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 7,000 பேர் தடுத்து வைக்கப்பட்டனர். பலர் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.

தடுத்து வைக்கப்பட்ட போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டதாகவும், அவர்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் விடுவிக்கப்பட்டதாகவும், பலரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைதியான முறையில்
தடுத்து வைக்கப்பட்டவர்களில் இந்திய மாநிலங்களின் நான்கு முன்னாள் முதல்-மந்திரிகள், மாணவர்கள், இளைஞர் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் அடங்குவர்.

இந்நிலையில் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமை மதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு, இந்தியாவிடம் ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு செய்தித் தொடர்பாளர் தமீன் அல்-கீதன் (Thameen Al-Kheetan) வலியுறுத்தி உள்ளார்.

ஐ.நா. கவலை
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

டெல்லியில் இன்று நடைபெற்ற பெரிய அளவிலான போராட்டங்களுக்கு முன்னதாகவும், அப்போராட்டங்களின் போதும், போராட்டக்காரர்கள், போராட்டத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இந்தியாவில் பெருமளவில் தடுத்து வைக்கப்பட்டதாக வரும் தகவல்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை முழுமையாக மதிக்கப்படுவதையும், நிறைவேற்றப்படுவதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம். அமைதியான போராட்டங்கள் மீதான கட்டுப்பாடுகள், அவசியம் மற்றும் விகிதாச்சாரம் (proportionality) குறித்த கடுமையான அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

கோரிக்கைகளுக்கு தீர்வு
நாட்டின் ஜனநாயக மரபுகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கடமைகளுக்கு இணங்க, அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராகச் செயல்படும்போது சட்ட அமலாக்க படைகள் மிகுந்த கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதை இந்திய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தன்னிச்சையாகத் தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்கப்பட வேண்டும்.

மேலும், பரவலாக எழுப்பப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

“டெல்லியில் போர் பதற்றச் சூழல்… நம் மாணவர்கள் மீது யுத்தம் நடத்த துணை ராணுவப் படை குவிப்பு” – சிபிஎம் சண்முகம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

உக்ரைனை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20 பேர் பலி

Next Post
உக்ரைனை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20 பேர் பலி

உக்ரைனை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin