Last Updated:
Noble prize Physics announced: ‘நியூட்ரினோ’ என்பது அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றாகும். பிரபஞ்சம் முழுவதிலும் காணப்படுகிறது
2026ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு, ‘நியூட்ரினோ’ துகள்களைக் கண்டறியும் ஆய்வுக்காக பேராசியர் பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் உள்ள ‘ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்தின்’ உருவாக்கத்தில் இவரது பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘நியூட்ரினோ’ என்பது அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றாகும். பிரபஞ்சம் முழுவதிலும் காணப்படுகிறது. நியூட்ரினோ பற்றிய ஆய்வானது இந்த பிரபஞ்சத்தின் தொடக்கத்தை குறித்து ஆராய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவை எந்தப் பொருளின் மீதும் மோதாது; எல்லாவற்றையும் மிக எளிதாக ஊடுருவிச் சென்றுவிடும். இவற்றைச் சாதாரண கருவிகளால் பார்க்கவோ, நேரடியாகக் கண்டறியவோ அளக்கவோ முடியாது. இருப்பினும், அண்டார்டிகாவின் உறைபனியில் இந்த துகள்களை கண்டறிய முடியும் என்ற யோசனையை பிரான்சிஸ் ஹால்சன் முன்வைத்தார்.
BREAKING NEWS
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2026 #NobelPrize in Physics to Francis Halzen “for decisive contributions to the IceCube Neutrino Observatory and the discovery of high-energy neutrinos of astrophysical origin.” https://t.co/UcPBWk0RiK
— The Nobel Prize (@NobelPrize) October 6, 2026
இதையடுத்து, அண்டார்டிகாவில் சுமார் ஒன்றரை மைல் ஆழப் பனிக்கு அடியில் ‘ஐஸ்கியூப்’ என்ற பிரம்மாண்டமான ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதன் உதவியோடு, நமது பால்வீதிக்கு வெளியே பிரபஞ்சத்தின் ஆழத்திலிருந்து வரும் அதிக ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களை 2013-ல் ஆய்வாளர்கள் முதன்முறையாகக் கண்டறிந்தனர். இந்த முயற்சிக்காக தற்போது அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


