• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆண்டுக்கு 20 லட்சம் விலங்குகளுக்கு உதவி.. 50+ அமைப்புகளுடன் கைகோர்க்கும் அனந்த் அம்பானி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஆண்டுக்கு 20 லட்சம் விலங்குகளுக்கு உதவி.. 50+ அமைப்புகளுடன் கைகோர்க்கும் அனந்த் அம்பானி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 06, 2026 12:15 PM IST

நாடு முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட விலங்கு நல அமைப்புகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

திட்ட அறிவிப்பின்போது ஆனந்த் அம்பானி
திட்ட அறிவிப்பின்போது ஆனந்த் அம்பானி

சர்வதேச விலங்குகள் தினத்தை முன்னிட்டு ஆனந்த் அம்பானி,‘சாம்பியன்ஸ் ஆஃப் கேர்’ (Champions of Care) என்ற புதிய தேசிய அளவிலான விலங்கு நலத் திட்டத்தை அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநரும், விலங்குகள் நல ஆர்வலருமான ஆனந்த் அம்பானி, தனது ‘வந்தாரா’ (Vantara) அமைப்பின் கீழ் ‘சாம்பியன்ஸ் ஆஃப் கேர்’ என்ற தேசிய அளவிலான புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

தெருக்களில் காயமடைந்து கிடக்கும் விலங்குகள், ஆதரவற்ற நாய் மற்றும் பூனைகள், சுமை தூக்கும் குதிரைகள், கழுதைகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றுக்காகப் பணியாற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவளித்து, அவற்றின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் விலங்குகளுக்குத் தேவையான உதவிகளைச் சென்றடைவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விலங்குகளுக்கான அவசர மருத்துவ சிகிச்சை, மீட்பு நடவடிக்கைகள், தங்குமிடம், உணவு வழங்குதல் மற்றும் நீண்டகால பராமரிப்பு ஆகியவை அடங்கும். மேலும், நாய்கள் மற்றும் பூனைகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ‘விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு’ (Animal Birth Control) திட்டங்களுக்கும் இக்கட்டமைப்பின் கீழ் நிதி மற்றும் ஆதார உதவிகள் வழங்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட விலங்கு நல அமைப்புகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் விலங்குகளை மீட்கும் அமைப்புகள், விலங்கு மருத்துவமனைகள், நடமாடும் மருத்துவச் சேவைகள் மற்றும் காயமடைந்த அல்லது கைவிடப்பட்ட விலங்குகளைப் பராமரிக்கும் காப்பகங்கள் ஆகியவை அடங்கும்.

இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில், இந்திய விலங்கு நல வாரியத்தின்  8 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

எந்தவொரு விளம்பரமும் எதிர்பார்க்காமல் தெருவோர விலங்குகளுக்காக நேரடியாகப் பணியாற்றும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் நிதி நெருக்கடியால் சந்திக்கும் சிரமங்களைப் போக்க இத்திட்டம் முயல்கிறது. வெறும் சிகிச்சையோடு நின்றுவிடாமல், களத்தில் நின்று உழைக்கும் மனிதர்களுக்கும், அமைப்புகளுக்கும் தேவையான மருத்துவ வசதிகள், வளங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே இதன் அடிப்படை அம்சமாகும்.

“ஒவ்வொரு உயிரும் முக்கியமானது” (Every Life Matters) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், நாட்டில் உள்ள விலங்கு நல அமைப்புகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் திறனை அதிகரித்து, ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான சூழலை விலங்குகளுக்கு உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

விவசாய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு! – ஐபிசி தமிழ்

Next Post

அவுஸ்திரேலிய அரசுத் தளத்தில் AI ஊடுருவல்! தவறை ஒப்புக்கொண்டு ஓபன்ஏஐ பகிரங்க மன்னிப்பு – Sri Lanka Tamil News

Next Post
அவுஸ்திரேலிய அரசுத் தளத்தில் AI ஊடுருவல்! தவறை ஒப்புக்கொண்டு ஓபன்ஏஐ பகிரங்க மன்னிப்பு – Sri Lanka Tamil News

அவுஸ்திரேலிய அரசுத் தளத்தில் AI ஊடுருவல்! தவறை ஒப்புக்கொண்டு ஓபன்ஏஐ பகிரங்க மன்னிப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin