• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அவுஸ்திரேலிய அரசுத் தளத்தில் AI ஊடுருவல்! தவறை ஒப்புக்கொண்டு ஓபன்ஏஐ பகிரங்க மன்னிப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அவுஸ்திரேலிய அரசுத் தளத்தில் AI ஊடுருவல்! தவறை ஒப்புக்கொண்டு ஓபன்ஏஐ பகிரங்க மன்னிப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
தொழில்நுட்பம் & அறிவியல்
/
அவுஸ்திரேலிய அரசுத் தளத்தில் AI ஊடுருவல்! தவறை ஒப்புக்கொண்டு ஓபன்ஏஐ பகிரங்க மன்னிப்பு

கடந்த ஜூன் மாதம், ஓபன்ஏஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட் ஒன்று வழிதவறி, அவுஸ்திரேலியாவின் மெடிகேர் திட்டத்தின் முக்கியமானதல்லாத தரவுகளைக் கொண்டிருந்த தனியார் புள்ளிவிவரத் தளத்துக்குள் ஊடுருவியது. 


அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இணையத்தளங்களுக்குள் தமது செயற்கை நுண்ணறிவு மாதிரி அத்துமீறி நுழைந்த சம்பவத்துக்குப் பின்னரான தமது நடவடிக்கைகள் போதுமானதாக இருக்கவில்லை என்பதை ஓபன்ஏஐ நிறுவனம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன், இது தொடர்பில் பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளது. அத்துடன், தமது பயிற்சிப் பிரிவுகளில் கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிட்னியில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான அவுஸ்திரேலிய நாடாளுமன்ற விசாரணைக் குழு முன்னிலையில் நேற்று ஆஜராகி சாட்சியமளித்த ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை உத்தி அதிகாரி ஜேசன் குவோன், இத்தகைய பாதுகாப்பு அத்துமீறல் இடம்பெற்றிருக்கக் கூடாது எனவும், இதற்கு நிறுவனம் மிகச் சிறந்த முறையில் பதிலளித்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

இந்த ஊடுருவல் இடம்பெற்ற பின்னர், பல வாரங்கள் கழித்தே பொதுவான மின்னஞ்சல் முகவரி ஒன்றுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்காக வருத்தம் தெரிவித்த அவர், அவுஸ்திரேலிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நிறையப் பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்றார்.

கடந்த ஜூன் மாதம், ஓபன்ஏஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட் ஒன்று வழிதவறி, அவுஸ்திரேலியாவின் மெடிகேர் திட்டத்தின் முக்கியமானதல்லாத தரவுகளைக் கொண்டிருந்த தனியார் புள்ளிவிவரத் தளத்துக்குள் ஊடுருவியது. 

இணையப் பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, செயற்கை நுண்ணறிவு சுயமாக அரசாங்கத் தளத்துக்குள் ஊடுருவிய முதலாவது சம்பவமாக இது கருதப்படுகிறது. எனினும், இந்த விவகாரம் கண்டறியப்பட்ட உடனேயே அரசாங்க அமைச்சர்களுடன் தொலைபேசி வாயிலாக நேரடித் தொடர்புகொள்ளாதது தவறான அணுகுமுறை என்பதை விசாரணைக் குழுவின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஜேசன் குவோன் ஒப்புக்கொண்டார். 

தொழில்நுட்ப ரீதியான விடயம் என்பதால் தொழில்நுட்ப அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவே அதிகாரிகள் முயன்றதாகவும், எனினும் அமைச்சர்களுக்கு உடனடியாக அறிவிக்கத் தவறியமை பலவீனமானது எனவும் அவர் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் நிலைமையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் கூட, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உடனடியாக அறிவித்து அவர்களுடன் இணைந்து பணியாற்ற புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதியளித்தார். 

தொழிற்கட்சி, லிபரல் கட்சி மற்றும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட இக்குழுவிடம் கருத்துத் தெரிவித்த அவர், அவுஸ்திரேலியாவில் உள்ளூர் செயலணி ஒன்றை அமைத்து செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகளைக் கையாள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். 

மேலும், மாதிரிகள் சோதிக்கப்படும் போது இணையத்துடன் தேவையற்ற தொடர்புகளை ஏற்படுத்தினால் உடனடியாக எச்சரிக்கை மணி ஒலிக்கும் வகையிலான புதிய கண்காணிப்புக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலமே கடந்த வாரம் நியூ சவுத் வேல்ஸ் அரச தளத்தில் நிகழ்ந்த மற்றொரு ஊடுருவலை 48 மணித்தியாலங்களுக்குள் அரசுக்கு அறிவிக்க முடிந்ததாகவும் விளக்கமளித்தார்.

Read More

Previous Post

ஆண்டுக்கு 20 லட்சம் விலங்குகளுக்கு உதவி.. 50+ அமைப்புகளுடன் கைகோர்க்கும் அனந்த் அம்பானி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

குடும்ப வாழ்க்கையை ஊக்குவிக்க… புதிய டேட்டிங் செயலி வெளியிட்ட சிங்கப்பூர் அரசாங்கம்! | World News (உலக செய்திகள்)

Next Post
குடும்ப வாழ்க்கையை ஊக்குவிக்க… புதிய டேட்டிங் செயலி வெளியிட்ட சிங்கப்பூர் அரசாங்கம்! | World News (உலக செய்திகள்)

குடும்ப வாழ்க்கையை ஊக்குவிக்க... புதிய டேட்டிங் செயலி வெளியிட்ட சிங்கப்பூர் அரசாங்கம்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin