பழைய விவசாய ஓய்வூதியத் திட்டத்தில் பங்களித்துள்ள ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஓய்வூதியங்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஓய்வூதியங்களை வழங்குவதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த விவசாய மற்றும் விவசாயக் காப்பீட்டுச் சபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, திறைசேரியினால் வழங்கப்படும் நிதியொதுக்கீடுகளுக்கு அமைவாக 2025 ஜூன், ஜூலை, ஒகஸ்ட், செப்டம்பர் மற்றும் 2026 ஏப்ரல், மே மாதங்களுக்குரிய நிலுவை ஓய்வூதியங்கள் வழங்கப்படுகின்றன.
38 மில்லியன் ரூபாய்
இந்தநிலையில் ஓய்வூதியங்களை வழங்கும் நடவடிக்கைகள் 2026 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதுவரை 2,910 விவசாயிகளுக்கு சுமார் 38 மில்லியன் ரூபாய் வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்நடவடிக்கை தொடர்ந்து அமையப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

