நல்லூரில் தியாக தீபத்தின் சிலையை நிறுவியமை தொடர்பில் நாளைய தினம் வாக்கு
மூலம் வழங்க நால்வருக்கு யாழ்ப்பாண காவல்துறையினர் அழைப்பாணை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தியாக தீபத்தின் சிலையை கடந்த ஞாயிற்றுகிழமை காவல்துறையினர் அகற்றி இருந்தனர்.
இந்நிலையில் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர் சிலை
வைத்தமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்க வருமாறு, தியாக தீபத்தின் நினைவேந்தல்
கட்டமைப்பை சேர்ந்த பொன் மாஸ்டர் என அழைக்கப்படும் பொன். குணரட்னம், தமிழ்
தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தியாக தீபத்தின் ஆவண
காப்பக செயற்பாட்டாளர்களான வரதராஜா பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை
தவிசாளர் ப.மயூரன் ஆகியோரையே விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

