Last Updated:
இதன் மூலம் காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்த வழித்தடத்தில் பயண நேரம் மேலும் குறைவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
உலகின் மிக உயரமான செனாப் பாலம் மற்றும் இந்தியாவின் முதல் கேபிள் பாலமான அஞ்சி பாலம் ஆகியவற்றை வந்தே பாரத் ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து சாதனை படைத்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்ரா – பனிஹால் இடையேயான 111 கிலோ மீட்டர் ரயில் பாதையில் இதுவரை அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கிலோ மீட்டராக இருந்தது. இதனை 100 கிலோ மீட்டராக உயர்த்தி ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
அதன்படி, இந்த வழித்தடத்தில் உள்ள செனாப் மற்றும் இந்தியாவின் முதல் கேபிள் பாலமான அஞ்சி பாலங்களை வந்தே பாரத் ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வெற்றிகரமாகக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியது.
இதன் மூலம், காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்த வழித்தடத்தில் பயண நேரம் மேலும் குறைவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.


