• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: மகுடம் சூடிய மங்கையர் – நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்த நியூஸ்18 | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆசிய விளையாட்டு போட்டி: மகுடம் சூடிய மங்கையர் – நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்த நியூஸ்18 | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 03, 2026 8:14 AM IST

ஆசிய விளையாட்டின் தடகளப் போட்டியில் முத்திரை பதித்து நாட்டிற்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு வீராங்கனைகளுக்கு நியூஸ் 18 தமிழ்நாடு சார்பில் பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டின் தடகள போட்டிகளில் வெற்றிபெற்று பதக்கம் வென்று தாயகம் திரும்பிய தமிழ்நாடு வீராங்கனைகள் பாராட்டு மழையில் நனைந்து வருகின்றனர். இதில், சென்னையில் உள்ள நியூஸ் 18 தமிழ்நாடு அலுவலகத்துக்கு வந்த வித்யா ராம்ராஜ், பரணிகா இளங்கோவன், அபிநயா ராஜராஜன் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கேக் வெட்டி உற்சாகப்படுத்தியதுடன், பூங்கொத்து மற்றும் நினைவுப்பரிசு வழங்கி நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் மற்றும் ஊழியர்கள் கவுரவித்தனர்.

கோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ், மகளிர் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். அப்போது, 54 புள்ளி 75 விநாடிகளில் இலக்கை எட்டி, பி.டி.உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். மேலும், மகளிர் அணி பிரிவில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றதும் பதக்க மேடையில் தேசிய கீதத்துடன் இந்திய மூவர்ணக் கொடி பட்டொளி வீசிய தருணம் மறக்க முடியாத நினைவாக அமைந்தது என்று வித்யா நெகிழ்ச்சி தெரிவித்தார்.

இதேபோன்று, மகளிருக்கான போல் வால்ட் எனப்படும் கோலூன்றி தாண்டுதல் போட்டியில், மயிலாடுதுறையைச் சேர்ந்த பரணிகா இளங்கோவன் வெண்கலம் வென்று வியக்க வைத்தார். ஆசிய விளையாட்டில் கோலூன்றித் தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்று வரலாறு படைத்ததன் பின்னணி குறித்த சுவாரஸ்ய தகவலை நியூஸ் 18 உடன் பரணிகா பகிர்ந்து கொண்டார்.

உடைந்த குதிரையை எப்படி ஓட வைக்கப்போகிறீர்கள் என்று பரணிகா காயமடைந்தது குறித்து எதிர்மறையாக பலரும் பேசிய நிலையில், அவர் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதித்ததாக பயிற்சியாளர் உணர்ச்சி பொங்க பெருமிதம் கொண்டார். தென்காசியைச் சேர்ந்த அபிநயா ராஜராஜன், கலப்பு பிரிவு 100 மீ தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று வியக்க வைத்தார். பெண்களை படிக்க அனுப்ப தயங்கும் ஊரில் இருந்து வந்த தான், ஆசிய விளையாட்டு தடகளத்தில் சாதித்தது பெரும் சாதனை என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். தங்களது அசாத்திய திறமையால் நாட்டுக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகளை கவுரவித்ததில் பெருமிதம் கொள்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு.

Read More

Previous Post

100 கிமீ வேகம்… உலகின் மிக உயரமான பாலம், நாட்டின் முதல் கேபிள் பாலத்தை கடந்து வந்தே பாரத் ரயில் சாதனை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

8th Pay Commission | 8வது ஊதியக் குழு… மத்திய அரசு ஊழியர்களின் நிலுவை தொகை எவ்வாறு கணக்கிடப்படும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
8th Pay Commission | 8வது ஊதியக் குழு… மத்திய அரசு ஊழியர்களின் நிலுவை தொகை எவ்வாறு கணக்கிடப்படும்? | வணிகம் போட்டோகேலரி

8th Pay Commission | 8வது ஊதியக் குழு... மத்திய அரசு ஊழியர்களின் நிலுவை தொகை எவ்வாறு கணக்கிடப்படும்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin