• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வருமான வரித் தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. புதிய அறிவிப்பு.. யாருக்கெல்லாம் பொருந்தும்? | Extension of deadline for filing income tax returns: Who does it apply to?

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வருமான வரித் தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. புதிய அறிவிப்பு.. யாருக்கெல்லாம் பொருந்தும்? | Extension of deadline for filing income tax returns: Who does it apply to?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Velmurugan P

Time
Published: Monday, September 28, 2026, 17:53 [IST]

டெல்லி: வருமான வரிச் சட்டத்தின் கீழ் கணக்குத் தணிக்கை (Tax Audit) செய்யப்பட வேண்டிய நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்குத் வரித் தணிக்கை அறிக்கை மற்றும் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.

வருமான வரிச் சட்டத்தின் கீழ் கணக்குத் தணிக்கை (Tax Audit) செய்யப்பட வேண்டிய நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 31 அக்டோபர் 2026-லிருந்து 21 நவம்பர் 2026 வரை நீட்டிக்க மத்திய நேரடி வரிகள் வாரியமமுடிவு செய்துள்ளது. அதன்படி, அத்தகைய நபர்களுக்கு, மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான வருமான வரிச் சட்டத்தின் விதிகளின் கீழ் தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான ‘குறிப்பிட்ட தேதி’ 21 அக்டோபர் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Extension of deadline for filing income tax returns Who does it apply to

முக்கியத் தேதிகள் மற்றும் காலக்கெடு நீட்டிப்பு:

வரித் தணிக்கை அறிக்கை (Tax Audit Report):

முந்தைய கடைசி தேதி: செப்டம்பர் 30, 2026

புதிய கடைசி தேதி: அக்டோபர் 21, 2026

வேறு வழியில்லை... இந்தியாவில் தனது பிடியை இறுக்க போகும் ரிசர்வ் வங்கி

வேறு வழியில்லை… இந்தியாவில் தனது பிடியை இறுக்க போகும் ரிசர்வ் வங்கி

வருமான வரித் தாக்கல் (ITR Filing – AY 2026-27):

முந்தைய கடைசி தேதி: அக்டோபர் 31, 2026

புதிய கடைசி தேதி: நவம்பர் 21, 2026 (21 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது).

காலக்கெடு நீட்டிக்கப்பட்டது ஏன்?

ஏராளமான ஆடிட்டர்கள் மற்றும் வரி ஆலோசகர்களின் கூட்டமைப்புகள், தணிக்கைப் பணிகளை நிறைவு செய்வதிலும், நிதி மற்றும் வரி தொடர்பான விவரங்களைச் சரிபார்ப்பதிலும் உள்ள பணிச்சுமையைக் சுட்டிக்காட்டி காலக்கெடுவை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். ஏனெனில் வரித் தணிக்கை அறிக்கையை இறுதி செய்வதற்கு முன் பலகட்ட சரிபார்ப்புகள் தேவைப்படுகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சரக்கு மற்றும் சேவை வரி வருவாயுடன் கணக்குகளை ஒப்பீடு செய்தாக வேண்டும்

TDS மற்றும் TCS விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.

Form 26AS, ஆண்டு தகவல் அறிக்கை (AIS) மற்றும் வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம் (TIS) ஆகியவற்றில் உள்ள தகவல்களைச் சரிபார்த்தாக வேண்டும்.

செலவினங்கள், நிலையான சொத்துக்கள், கடன்கள், சட்டப்பூர்வ நிலுவைகள் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் பரிவர்த்தனைகள் போன்றவற்றை ஆய்வு செய்தாக வேண்டும்.

எனவே சிக்கலான கணக்குகளைக் கொண்ட நிறுவனங்களுக்குச் செப்டம்பர் 30-க்குள் இவற்றைச் முடிப்பது சிரமமாக இருந்ததால் இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை லீவு கேட்ட வங்கி ஊழியர்களுக்கு ஞாயிறு வேலை நாள்.. திங்களும் வேலை நாள்.. மீம்ஸ் பாருங்க!

சனிக்கிழமை லீவு கேட்ட வங்கி ஊழியர்களுக்கு ஞாயிறு வேலை நாள்.. திங்களும் வேலை நாள்.. மீம்ஸ் பாருங்க!

வரி செலுத்துவோர் தற்போது செய்ய வேண்டியவை என்ன?

காலக்கெடு நீட்டிக்கப்பட்டுவிட்டதால் பணிகளைத் தள்ளிப்போடக் கூடாது. வரித் தணிக்கையின் கீழ் வருபவர்கள் இந்த கூடுதல் காலத்தைப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள கணக்குகளைச் சரிசெய்து, தேவையான ஆவணங்களைத் தங்களது ஆடிட்டர்களிடம் உடனே வழங்க வேண்டும்.

உங்களது கணக்கு புத்தகங்கள், வங்கி கணக்கு விவரங்கள் (பேங்க் ஸ்டேட்மெண்ட்), இன்வாய்ஸ்கள், GST ஆவணங்கள் மற்றும் TDS விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.

AIS, TIS மற்றும் Form 26AS படிவங்களை ஆய்வு செய்து, கணக்கு புத்தகங்களுடன் வேறுபாடுகள் இருந்தால் அவற்றை முன்கூட்டியே சரிசெய்துவிட வேண்டும்.

தணிக்கையாளர் வரித் தணிக்கை அறிக்கையைப் பதிவேற்றிய பிறகு, வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி e-filing கணக்கிற்குச் சென்று அதை ஏற்றுக்கொண்டு அப்ரூவல் செய்ய வேண்டும். எனவே கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என ஆடிட்டர்கள் கூறியுள்ளனர்.

English summary

The Central Board of Direct Taxes (CBDT) has extended the deadline for filing tax audit reports and income tax returns for entities and individuals required to undergo a tax audit under the Income Tax Act.

Read More

Previous Post

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்தது

Next Post

ரூ.25,000 சம்பள உச்சவரம்பு.. அக்டோபர் முதல் எவ்வளவு PF பிடித்தம் செய்யப்படும்? EPFO அமைப்பு கொடுத்த சர்ப்ரைஸ் | How much PF will be deducted starting October under the new Rs.25,000 wage ceiling?

Next Post
ரூ.25,000 சம்பள உச்சவரம்பு.. அக்டோபர் முதல் எவ்வளவு PF பிடித்தம் செய்யப்படும்? EPFO அமைப்பு கொடுத்த சர்ப்ரைஸ் | How much PF will be deducted starting October under the new Rs.25,000 wage ceiling?

ரூ.25,000 சம்பள உச்சவரம்பு.. அக்டோபர் முதல் எவ்வளவு PF பிடித்தம் செய்யப்படும்? EPFO அமைப்பு கொடுத்த சர்ப்ரைஸ் | How much PF will be deducted starting October under the new Rs.25,000 wage ceiling?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin