Last Updated:
சத்தீஸ்கர் மாநிலத்திலும் 24 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளத்தால் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு இடங்கள் தத்தளிக்கின்றன. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் கனமழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒடிசாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அம்மாநிலத்தின் மல்காங்கிரி, கோராபுட், ராயகடா, கஜபதி, பாலசோர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றன.
ராய்பூர் அருகே கருன் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்த நிலையில் சிறுவர்கள் துள்ளி குதித்து நீச்சலடித்தனர். சத்தீஸ்கரை ஒட்டி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே கனமழையால் சுபர்ணரேகா (Subarnarekha) ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனிடையே, சிக்கிம் மாநிலத்தின் ரிம்பி பகுதியில் இடைவிடாமல் கொட்டிய மழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.


