• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற தனோஜ் தீக்ஷணவுக்கு பாராட்டு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற தனோஜ் தீக்ஷணவுக்கு பாராட்டு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கிழக்கு
/
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற தனோஜ் தீக்ஷணவுக்கு பாராட்டு

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற எஹெட்டுவெவ ஆரம்பப் பாடசாலை மாணவன் தனோஜ் தீக்ஷண, கல்கமுவ அங்கமுகம அல்-அக்ஸா ஜும்ஆ மஸ்ஜிதில் கௌரவிக்கப்பட்டார்.


2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகளைப் பெற்று, அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவன் தனோஜ் தீக்ஷண வீரசேகரவை கௌரவிக்கும் நிகழ்வு, கல்கமுவ அங்கமுகம அல்-அக்ஸா ஜும்ஆ மஸ்ஜிதில் நேற்று (26) நடைபெற்றது. குருநாகல் மாவட்டம், மஹவ கல்வி வலயத்தைச் சேர்ந்த எஹெட்டுவெவ ஆரம்பப் பாடசாலை மாணவரான தனோஜ் தீக்ஷண, சிறுவயதிலேயே தாயை இழந்த போதிலும் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து, இந்த வெற்றியை ஈட்டியுள்ளார்.

அல்-அக்ஸா ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாக சபைத் தலைவர் எஸ்.எல்.எம். அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

தொழுகைக்கான அஸான் ஒலிப்பதற்கு முன்னர் மாணவன் தனோஜ் தீக்ஷணவை வாகனப் பேரணியாக அப்பிரதேச வீதிகளின் வழியே ஊர்வலமாக அழைத்து வந்து, பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில், மாணவனின் சாதனையைப் பாராட்டும் வகையில் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, ஜும்ஆ குத்பா சிங்கள மொழியில் நிகழ்த்தப்பட்டது. தன்வீர் நிறுவனத்தின் பிரதி அதிபரும் மார்க்க அறிஞருமான ரஸ்மி அப்துர் ரஹ்மான் நளீமி, கல்வியைக் கற்றுக்கொள்பவராக, கற்றுக்கொடுப்பவராக அல்லது அதற்கு உதவி செய்பவராக இருக்க வேண்டும் என்ற நபி மொழியை மையமாகக் கொண்டு, உரையாற்றினார். கல்வியின் அவசியம், சமூகத்தின் கல்விப் பங்களிப்பு மற்றும் இலங்கையில் இன நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அவர் தமது உரையில் வலியுறுத்தினார்.

ஒரு மாணவனின் விடாமுயற்சியைப் பாராட்டியதோடு, சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய இந்நிகழ்வில் அப்பகுதி பொதுமக்கள், மதத் தலைவர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எம். ரங்க சமீர ராஜபக்ஷ மற்றும் அம்பன்பொல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி. எம். சுஜீவ சமந்த குமார உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தகவல் – Mohamed Yasir

Read More

Previous Post

முட்டாளின் பதிவுக்கு பதில் சொல்லாதீர்கள் – ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சூர்யா அறிவுரை … | Makkal Osai

Next Post

கனமழையால் தத்தளிக்கும் ஒடிசா, சத்தீஸ்கர்… வெள்ளக்காடாக காட்சியளிக்கும் துயரம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
கனமழையால் தத்தளிக்கும் ஒடிசா, சத்தீஸ்கர்… வெள்ளக்காடாக காட்சியளிக்கும் துயரம்! | India News (இந்தியா செய்திகள்)

கனமழையால் தத்தளிக்கும் ஒடிசா, சத்தீஸ்கர்... வெள்ளக்காடாக காட்சியளிக்கும் துயரம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin