• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சமையல் எண்ணெய் விலை குறைய போகுது..!! மிடில் கிளாஸ் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு..!! | Cooking Oil Prices May Fall: Centre Cuts Import Duty on Sunflower, Soybean and Palm Oil Ahead of Festive Season

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சமையல் எண்ணெய் விலை குறைய போகுது..!! மிடில் கிளாஸ் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு..!! | Cooking Oil Prices May Fall: Centre Cuts Import Duty on Sunflower, Soybean and Palm Oil Ahead of Festive Season
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமையல் எண்ணெய் விலை குறைய போகுது..!! மிடில் கிளாஸ் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு..!!

இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் சமையல் எண்ணெய்க்கு முக்கிய இடம் உண்டு. அண்மை காலமாக ஈரான் போர் , சரக்கு போக்குவரத்து பாதிப்பு, உக்ரைன் ரஷ்யா மோதல் ஆகிய காரணங்களால் சமையல் எண்ணெய் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன.

இனி வரும் நாட்களில் ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்த பண்டிகை காலம். இந்த காலத்தில் நாம் அதிகமாக சமையல் எண்ணெய் பயன்படுத்துவோம். ஏனெனில் வழக்கமான உணவுகளை தாண்டி இனிப்பு, பலகாரம் தயாரிப்புகள் இருக்கும். எனவே வழக்கத்தை விட கூடுதலாக சமையல் எண்ணெய் வாங்க வேண்டி இருக்கும். இந்நிலையில் தான் மிடில் கிளாஸ் மக்களுக்கு மத்திய அரசு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.

சமையல் எண்ணெய் விலை குறைய போகுது..!! மிடில் கிளாஸ் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு..!!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. விலைவாசி உயர்வு அழுத்தங்களுக்கு மத்தியில், உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் கொண்டுவரவும், பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு நிம்மதி அளிக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி கச்சா சூரியகாந்தி எண்ணெய் (Crude Sunflower Oil) சுங்க வரி 10%இல் இருந்து 0%ஆக குறைக்கப்பட்டுள்ளது , அதாவது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி முழுவதும் ரத்தி செய்யப்பட்டுள்ளதால் அதன் விலை கணிசமாக குறையும். பெரும்பாலான இந்தியர்கள் சமையலுக்கு சூரிய காந்தி எண்ணெய் தான் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த விலை குறைவு பலருக்கும் லாபத்தை தரும்.

அடுத்ததாக கச்சா சோயாபீன் மற்றும் பாமாயில் (Crude Soybean and Palm Oil) மீதான சுங்க வரி 10%இல் இருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுக்கு இடையே 19.25% இறக்குமதி வரி வேறுபாட்டை தக்கவைத்துக்கொண்டு, சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மீதான சுங்க வரியையும் அரசு குறைத்துள்ளது.

இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. இதனால், தான் போர் உள்ளிட்டவை நம் நாட்டில் எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.இதற்கிடையே இறக்குமதி வரி குறைப்பின் பலன்கள் முழுமையாக நுகர்வோரை சென்றடைவதை உறுதி செய்யுமாறு, சமையல் எண்ணெய் சங்கங்கள் மற்றும் துறை சார்ந்த பங்குதாரர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

குறைக்கப்பட்ட இறக்குமதி வரிகள், நுகர்வோர் விலையை குறைக்க வழிவகுக்கும் என கூறும் இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் சங்க தலைவர் சுதாகர் தேசாய் தெற்காசிய நாடுகளிலிருந்து சுங்க வரியே இல்லாமல் எண்ணெய் இறக்குமதி செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article

English summary

Cooking Oil Prices May Fall: Centre Cuts Import Duty on Sunflower, Soybean and Palm Oil Ahead of Festive Season

சமையல் எண்ணெய் விலை குறைய போகுது..!! மிடில் கிளாஸ் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு..!!/ The Central Government has reduced the basic customs duty on imported edible oils with effect from September 24, aiming to control domestic cooking oil prices ahead of the festive season.

Story first published: Friday, September 25, 2026, 11:49 [IST]

Other articles published on Sep 25, 2026

Read More

Previous Post

“இனி இந்தப் பொருளை, பனீர் என்ற பெயரில் விற்கக்கூடாது” – அதிரடி உத்தரவு போட்ட FSSAI | Analog Paneer | Lifestyle News (வாழ்க்கை முறை செய்திகள்)

Next Post

DECODE | சீன அதிபருக்காக மரபை உடைத்த டிரம்ப்… உற்றுநோக்கும் உலகம்… என்ன நடந்தது?

Next Post
DECODE | சீன அதிபருக்காக மரபை உடைத்த டிரம்ப்… உற்றுநோக்கும் உலகம்… என்ன நடந்தது?

DECODE | சீன அதிபருக்காக மரபை உடைத்த டிரம்ப்... உற்றுநோக்கும் உலகம்... என்ன நடந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin