Last Updated:
மலைப்பாம்பை தோளில் போட்டுக் கொண்டு நடனமாடிய டான்ஸ் குழுவினர் அனைவரும், வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் மலைப்பாம்பை தோளில் போட்டுக்கொண்டு பெண் ஒருவர் நடனமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சியில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த நடனக் குழுவினர் கலை நிகழ்ச்சி நடத்தியபோது, அவர்களது குழுவை சேர்ந்த பெண் ஒருவர் மலைப்பாம்புடன் நடனமாடினார்.
இதுகுறித்து தகவலறிந்த வனவிலங்கு பாதுகாப்புத்துறையினர், குழுவினரை தேடும் பணியில் இறங்கினர். 5 நாட்களுக்குப் பிறகு, மதுரா நகர் அருகே நடனக் குழுவினரை கண்டுபிடித்து மலைப்பாம்பை பறிமுதல் செய்தனர்.
பின்னர் மலைப்பாம்பை அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விடுவித்தனர். மலைப்பாம்பை தோளில் போட்டுக் கொண்டு நடனமாடிய டான்ஸ் குழுவினர் அனைவரும், வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.


