• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொன்ற விக்னேஸ்வரனுக்கு எதிராக கூலிம் மாவட்ட நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொன்ற விக்னேஸ்வரனுக்கு எதிராக கூலிம் மாவட்ட நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கடந்த வாரம் தனது மனைவியைக் கொடூரமாகக் குத்திக் கொன்ற குற்றத்திற்காக, வேலை இல்லாத 43 வயது கணவன் மீது இன்று கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் நூர் ஹமிஸா மாத் ஷா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதும், சந்தேக நபரான ஜி. விக்னேஸ்வரன் (வயது 43) தனக்கு எதிரான குற்றச்சாட்டத்தைப் புரிந்து கொண்டதாகத் தலையசைத்தார்.

வழக்கறிஞர் எவரும் இன்றி ஆஜரான அவரிடம், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்பதால் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றச்சாட்டுகளின்படி, கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 9.04 மணிக்கு இடையில், தாமான் திராம் பகுதியிலுள்ள வீடொன்றில் எஸ். சீலா (வயது 39) என்ற பெண்ணை விக்னேஸ்வரன் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட பொறாமை சார்ந்த தகராறே இந்த கொலைக்குக் காரணம் என நம்பப்படுகிறது.

மடக்கும் கத்தியைப் பயன்படுத்தித் தனது மனைவியை விக்னேஸ்வரன் 13 முறை குத்தியுள்ளார். “இந்தக் கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் 7 குத்துகளும், வயிற்றுப் பகுதியில் 5 குத்துகளும், வலது விலாப்புறத்தில் ஒரு குத்தும் விழுந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த ரத்தக் களறி தாக்குதலுக்குப் பிறகு, 43 வயது சந்தேக நபர் லுனாஸ் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று, தான் மனைவியைக் குத்தியதை ஒப்புக் கொண்டார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் தொடரப்பட்டுள்ளது. அத்தோடு சந்தேக நபருக்கு ஜாமீன் எதுவும் வழங்கப்படாத நிலையில், வழக்கு மறு விசாரணைக்காக வரும் டிசம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



Read More

Previous Post

குறைகிறதா Take Home சம்பளம்…? மாதம் ₹833 முதல் அதிகரிக்கும் பென்ஷன் பணம்… ஊதிய உச்ச வரம்பால் யாருக்கு என்ன நன்மை.. | FAQ | வணிகச் செய்திகள்

Next Post

குளவிக்கொட்டில் லிந்துலையில் ஒருவர் மரணம் | Tamilmirror Online

Next Post
குளவிக்கொட்டில் லிந்துலையில் ஒருவர் மரணம் | Tamilmirror Online

குளவிக்கொட்டில் லிந்துலையில் ஒருவர் மரணம் | Tamilmirror Online

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin