எஸ்.கௌசல்யா
டீயாரை லெந்தோமஸ் தோட்டத்தைச் சேர்ந்த, எழுபது வயதுடைய சுப்ரமணியம் என்னும் முதியவர் குளவிக்கொத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் திங்கட்கிழமை (21) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மேலும் ஏழு பேர் குளவிக்கொத்துக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை தோட்டத்தில் தொழில் செய்துகொண்டிருக்கும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றபோதிலும், செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


