Last Updated:
இருப்பினும், பூட்டின் அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே காணப்பட்டது
ரஷ்யா நாடாளுமன்றத் தேர்தலில், விளாதிமிர் புதினின் ‘ஐக்கிய ரஷ்யா’ கட்சி பெருவாரியான வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது. ஏற்கனவே பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முடிவாக இருந்தாலும், யாரும் கணிக்க முடியாத அளவு பூட்டினின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதை தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்ற்ன.
ரஷ்ய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. உக்ரைன் போருக்கு பிந்தைய முதல் தேர்தல் என்பதால் உலக நாடுகள் மத்தியிலும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இருப்பினும், பூட்டின் அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே காணப்பட்டது. கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதன் காரணமாக, அதிபர் புதினின் ‘ஐக்கிய ரஷ்யா’ கட்சி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தனது பெரும்பான்மையையும், முழு பலத்தையும் தக்கவைக்கும் போக்கு காணப்பட்டது.
அதன்படி, நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், அதிபர் புதினின் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 450 இடங்களில் ஆளும் ஐக்கிய ரஷ்யா 355 இடங்களை கைப்பற்றியது.


