தற்போதைய நடைமுறைன் கீழ், அடிப்படை சம்பளம் மாதம் ₹15,000 வரை பெறும் ஊழியர்கள் கட்டாயமாக பிஎஃப் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். தற்போதைய அமைச்சரவை ஒப்புதலின்படி, இந்த வரம்பு ₹25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ₹25,000-க்கும் குறைவாக இருந்தால், வேலை கொடுக்கும் நிறுவனம் கட்டாயமாக அவருக்கு பி.எஃப் கணக்கைத் தொடங்கி, தனது கைக்காசையும் அதில் போட்டே ஆக வேண்டும். இதற்கு முன்னதாக, இந்த வருமான வரம்பு ₹15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்ததது. எனவே, ₹25,000 வரை அடிப்படை ஊதியம் பெறும் தனியார் மற்றும் அமைப்புசார் நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவரும் இனி பி.எஃப் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்.


