• Login
Sunday, August 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சைப்ரஸ் தீவுக்கு அருகே பயணிகள் படகு விபத்து – 6 பேர் உயிரிழப்பு; 270 பேர் மீட்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சைப்ரஸ் தீவுக்கு அருகே பயணிகள் படகு விபத்து – 6 பேர் உயிரிழப்பு; 270 பேர் மீட்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
சைப்ரஸ் தீவுக்கு அருகே பயணிகள் படகு விபத்து – 6 பேர் உயிரிழப்பு; 270 பேர் மீட்பு

விபத்துக்குள்ளான படகில் 259 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் என மொத்தம் 267 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள சைப்ரஸ் தீவுக்கு அருகில் பயணிகள் படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 270 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சைப்ரஸின் கைரேனியா (கிர்னே) நகரிலிருந்து துருக்கியின் தாசுகு நகரை நோக்கிப் பயணித்த ‘பிலோ டெனிஸ்சிலிக்’ நிறுவனத்துக்குச் சொந்தமான கேடமரான் படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் 259 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் என மொத்தம் 267 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைரேனியா நகரிலிருந்து சுமார் 5 முதல் 7.5 கிலோமீற்றர் தொலைவில் நடுக்கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்தபோது, திடீரென படகுக்குள் நீர் புகுந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கப்டன் உடனடியாக படகை கரையை நோக்கித் திருப்ப முயற்சித்துள்ளார். எனினும், கடுமையான அலைகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பாரிய அலையின் தாக்கத்தில் படகு முழுமையாகக் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும் கடலோரக் காவல்படையினர், ஹெலிகொப்டர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களின் படகுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடலில் தத்தளித்த பயணிகள் மற்றும் படகின் பணியாளர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு அவசர சிகிச்சை வழங்குவதற்காக கைரேனியா துறைமுகத்தில் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கியின் நிக்கோசியா தூதர் அலி முராத் பாஸ்கெரி உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான சரியான காரணம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

காவிரி நீர் விவகாரம்… தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

Next Post

1,643 குழந்தைகளின் உயிரைக் காத்த தலைமை ஆசிரியர்! நேபாள வெள்ளத்தில் நடந்த சம்பவம்.. | World News (உலக செய்திகள்)

Next Post
1,643 குழந்தைகளின் உயிரைக் காத்த தலைமை ஆசிரியர்! நேபாள வெள்ளத்தில் நடந்த சம்பவம்.. | World News (உலக செய்திகள்)

1,643 குழந்தைகளின் உயிரைக் காத்த தலைமை ஆசிரியர்! நேபாள வெள்ளத்தில் நடந்த சம்பவம்.. | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin