தமிழின விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான தியாகி பொன் சிவகுமாரன் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்த தனது தாய் மற்றும் சகோதரர்களிடம் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன.
மரணப்படுக்கையில் இருந்த சிவகுமாரனைப் பார்த்து கவலையடைந்த சகோதரியிடம், ”ஏன் அழுகிறாய், நான் மீண்டும் உன் வயிற்றில் பிறப்பேன், இந்த மண்ணின் விடுதலைக்காக போராடுவேன்”என்று தெரிவித்துள்ளார்.
தமிழின விடுதலைக்காக போராடிய பொன் சிவகுமாரன் 1950 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – உரும்பிராயில் பிறந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் மாணவர்களின் கல்விக்காகவும் அயராது பாடுபட்டு 1974 ஆம் ஆண்டு தனது 24 ஆவது வயதில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பின் போது நஞ்சருந்தி உயிரிழந்தார்.
ஈழப்போராட்ட வராற்றில் முதன் முதலில் நஞ்சருந்தி உயிர் நீத்த வீரரான பொன் சிவகுமாரன் உயர்தரத்தில் கல்வி கற்ற போது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வித் தரப்படுத்தல் முறைக்கு எதிராக போராடி தமிழ் மாணவர்களின் எதிர்காலத்திற்கு சேவையாற்றியுள்ளார்.
மேலும் தியாகி பொன் சிவகுாரனின் மறைவின் பின்னர் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஏராளமான மக்கள் பெரும் திரளாக திரண்டு அஞ்சலி செலுத்தியமை அக்கால கட்டத்தில் தமிழ் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

