கலபொட அத்தே ஞானசார தேரர் தங்கியிருக்கும் ராஜகிரிய, நாவல சத்தர்ம ராஜிக விஹாரையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் அனில் உதயசிறி குணவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்த கான்ஸ்டபிள் நீண்டகாலமாக கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

