விஜே சித்து, மதன் கௌரி, கோபி-சுதாகருக்கு ஜாக்பாட்.. Netflix ஆட்டத்தை அடக்க பணத்தை அள்ளிக்கொடுக்கும் யூடியூப்!
இணைய உலகில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய போட்டி உருவாகியுள்ளதால் விஜே சித்து, மதன் கௌரி, கோபி-சுதாகர் போன்ற டாப் கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பும், வருமானமும் கிடைக்க உள்ளது.
சினிமா துறைகளில் டாப் நட்சத்திரங்கள் எத்தகைய படத்தில், எந்த டைரக்டர் உடன் நடித்தாலும் அந்த படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு கிடைக்கும். ஆனால் மற்ற நடிகர்களுக்கு இத்தகைய வரவேற்பு கிடைப்பது இல்லை. இதே நிலை தான் தற்போது சமுக வலைத்தளத்திலும் உருவாகியுள்ளது.

உலகம் முழுவதிலும் கண்டென்ட் கிரியேட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது ஒருப்பக்கம் இருந்தாலும் அதிக பார்வையாளர்கள் என்னவோ ஒரு சிலருக்கு தான் உள்ளது. இவர்கள் அடிப்படையில் தான் மொத்த விளம்பர வர்த்தகமும் நடக்கிறது.
இதை உணர்ந்த OTT தளமான நெட்பிளிக்ஸ் திரைப்படங்கள், வெப் சீரியல், கேம்ஸ் போன்றவற்றை தாண்டி மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் டாப் கண்டென்ட் கிரியேட்டக்களின் வீடியோ யூடியூப்-ல் பதிவேற்றம் செய்வது போல் நெட்பிளிக்ஸ் தளத்திலும் பதிவேற்றம் செய்யும் வாய்ப்பை கொடுத்துள்ளது.
இதற்காக Non-Exclusive Licensing content ஒப்பந்தம் கையெழுத்திட்டு வருகிறது. சமீபத்தில் Alan Chikin Chow, Nick DiGiovanni, Ms. Rachel போன்றவர்களுடன் இத்தகைய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது.
இது யூடியூப்-க்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்பதால், தனது தளத்தில் இருக்கும் டாப் கிரியேட்டர்களுக்கு பல மல்லியன் டாலர் தொகையை கொடுத்து தொடர்ந்து யூடியூப்-ல் மட்டுமே பதிவேற்றம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த தொகையை நேரடி பணமாகவோ அல்லது விளம்பர ஒப்பந்தத்தில் சில பகுதியை கொடுப்பதன் மூலம் ஈடு செய்ய யூடியூப் நிர்வாகம் திட்டமிட்டு இதுகுறித்து ஆலோசனை செய்து வருகிறது. இத்தகைய பெரும் தொகை டாப் கிரியேட்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும், மற்றவர்களுக்கு இத்தகைய பெரும் தொகை கிடைக்காது.
இதன் மூலம் நெட்பிளிக்ஸ்-ன் செயல்பாடுகள் முடக்கப்பட்டு உள்ளது, இந்த 3 பேர் மட்டும் அல்லாமல் பல கிரியேட்டர்கள், சேனல்கள், செலிபிட்ரிட்டு ஷோக்கள், பல்வேறு நிகழ்ச்சிகளிடம் நெட்பிளிக்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் பல கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு ஏற்கனவே தாங்கள் யூடியூப்-ல் அப்லோடு செய்துள்ள வீடியோவை நெட்பிளிக்ஸ்-ல் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்க வாய்ப்பையும் கொடுத்துள்ளது. இதேவேளையில் யூடியூப் நிர்வாகம் ஒரே வீடியோவை மற்ற தளத்தில் பதிவிட்டால் viewership குறைக்கப்படும் என்றும் விளம்பரத்திற்கான சிக்னல் குறைக்கப்படும் என எச்சரித்துள்ளது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் 325 மில்லியன் பெய்டு சப்ஸ்கிரைப்ர்ஸ்கள் உள்ளனர், ஆனால் யூடியூப்-ல் 2.5 பில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சப்ஸ்கிரைப்ர்ஸ் எண்ணிக்கையில் யூடியூப் உடன் போட்டிப்போட முடியாவிட்டாலும் அதிகப்படியான டாப் கிரியேட்டர்களை ஈர்த்தால் இலவசமாக பார்க்கும் வாய்ப்பை நெட்பிளிக்ஸ் கொண்டு வரலாம். இதன் மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும்.

