• Login
Thursday, August 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இடியப்ப விற்பனை போர்வையில் வீட்டு மொட்டை மாடியில்  கஞ்சா தோட்டம் – வியாபாரி கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இடியப்ப விற்பனை போர்வையில் வீட்டு மொட்டை மாடியில்  கஞ்சா தோட்டம் – வியாபாரி கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
இடியப்ப விற்பனை போர்வையில் வீட்டு மொட்டை மாடியில்  கஞ்சா தோட்டம் – வியாபாரி கைது

கைதான சந்தேகநபர், காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம் மற்றும் புட்டு போன்ற உணவுகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாக கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கல்முனை, கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா தோட்டபயிர்ச் செய்கையை, நேற்று புதன்கிழமை (19) பொலிஸார் அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே, இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் 4ஆம் மாடி மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.

கைதான சந்தேகநபர், காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம் மற்றும் புட்டு போன்ற உணவுகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாக கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டலில், கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான பொலிஸ்குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்தனர்.

மேற்படி வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் மிகவும் பாதுகாப்பாக, ஒரு முறைப்படியான பயிர்ச்செய்கை போன்று வளர்க்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் அங்கு வளர்க்கப்பட்ட செடிகளைக் கைப்பற்றி, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்முனைத் தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்


Princiya Dixci

WRITTEN BY

Princiya Dixci

2022ஆம் ஆண்டில் இருந்து நியூஸ்21 டிஜிட்டல் ஊடகத்தில் செய்தி ஆசிரியராக இணைந்து செய்திகளை அளித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றுவதுடன், புலனாய்வு அறிக்கை…


→

Read More

Previous Post

அனைத்துக் கடற்றொழில் அதிகாரிகளுக்கும் மின்சார மோட்டார் சைக்கிள் வழங்க எதிர்பார்ப்பு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் – Sri Lanka Tamil News

Next Post

Property Rights | மனைவி பெயரில் வாங்கப்படும் சொத்து யாருக்கு சேரும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Property Rights | மனைவி பெயரில் வாங்கப்படும் சொத்து யாருக்கு சேரும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

Property Rights | மனைவி பெயரில் வாங்கப்படும் சொத்து யாருக்கு சேரும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin