• Login
Thursday, August 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அனைத்துக் கடற்றொழில் அதிகாரிகளுக்கும் மின்சார மோட்டார் சைக்கிள் வழங்க எதிர்பார்ப்பு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அனைத்துக் கடற்றொழில் அதிகாரிகளுக்கும் மின்சார மோட்டார் சைக்கிள் வழங்க எதிர்பார்ப்பு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
அனைத்துக் கடற்றொழில் அதிகாரிகளுக்கும் மின்சார மோட்டார் சைக்கிள் வழங்க எதிர்பார்ப்பு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

சலுகைகளுக்காகவோ சுகபோகங்களுக்காகவோ நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. எமது அணியின் அரசியலே அதுதான். இதனால்தான் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக ஆணையளித்தனர்.

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் அனைத்துக் கடற்றொழில் அதிகாரிகளுக்கும் மின்சார மோட்டார் சைக்கிள் (Electric Motorcycle) வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இதற்காக தமது அமைச்சின் செயலாளர் பெரிதும் முயன்றுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள 112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, கொழும்பில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (19) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அமைச்சர் மேற்படி கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

“இன்று நியமனம் பெற்றுள்ள எவரும் எங்களைத் தொடர்புகொண்டு கோரிக்கை வைக்கவில்லை. அரசியல் சிபாரிசுகளின் அடிப்படையில் ஆள்தேர்வு செய்யப்படுவதும் இல்லை. அனைத்து நியமன நடைமுறைகளும் முறைப்படியே பின்பற்றப்படுகின்றன. இதில் எந்தவிதக் கட்சிப் பாகுபாடும் காட்டப்படவில்லை, திறமையானவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

“இன்று பதவி நியமனம் பெறும் நீங்கள் இதே நிலையிலேயே நீடிக்கப் போவதில்லை. எதிர்காலத்தில் உங்களுக்குப் பதவி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் கிடைக்கப்பெறும்.

“டிஜிட்டல் துறை குறித்த அனுபவமும் தொழில்நுட்ப அறிவும் உங்களுக்கு உண்டு. உங்களுக்குத் தேவையான வசதிகளை நாம் செய்து தருவோம். அவற்றைப் பயன்படுத்தி, எமது கடற்றொழிலாளர்களுக்கும் டிஜிட்டல் மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த அறிவை வழங்கும் வேலைத்திட்டங்களை நீங்கள் முன்னெடுக்க வேண்டும்.

“இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் அனைத்துக் கடற்றொழில் அதிகாரிகளுக்கும் மின்சார மோட்டார் சைக்கிள் (Electric Motorcycle) ஒன்றை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதற்காக எமது அமைச்சின் செயலாளர் பெரிதும் முயன்றுள்ளார்.

” எனவே, நீங்கள் உங்களின் சேவையை மக்களுக்குச் சிறப்பாக வழங்க வேண்டும்” என்றார். 

அதேவேளை, ” சலுகைகளுக்காகவோ சுகபோகங்களுக்காகவோ நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. எமது அணியின் அரசியலே அதுதான். இதனால்தான் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக ஆணையளித்தனர்.

” அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் சலுகைகளை நாம் நிராகரித்துள்ளோம். ஜனாதிபதியும் பிரதமரும் கூட வீண் விரயங்களைச் செய்யாமல், மக்களின் பணத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர். அமைச்சர்களுக்குரிய உத்தியோகபூர்வ மாளிகைகளை நாங்கள் பெறவில்லை; கூடுதல் பாதுகாப்பையும் கோரவில்லை,” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(செய்தி – க.கிஷாந்தன்)


Princiya Dixci

WRITTEN BY

Princiya Dixci

2022ஆம் ஆண்டில் இருந்து நியூஸ்21 டிஜிட்டல் ஊடகத்தில் செய்தி ஆசிரியராக இணைந்து செய்திகளை அளித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றுவதுடன், புலனாய்வு அறிக்கை…


→

Read More

Previous Post

தெஹிவளை மிருகக்காட்சி சாலை ஒட்டகச்சிவிங்கி மரணம்

Next Post

இடியப்ப விற்பனை போர்வையில் வீட்டு மொட்டை மாடியில்  கஞ்சா தோட்டம் – வியாபாரி கைது – Sri Lanka Tamil News

Next Post
இடியப்ப விற்பனை போர்வையில் வீட்டு மொட்டை மாடியில்  கஞ்சா தோட்டம் – வியாபாரி கைது – Sri Lanka Tamil News

இடியப்ப விற்பனை போர்வையில் வீட்டு மொட்டை மாடியில்  கஞ்சா தோட்டம் - வியாபாரி கைது - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin