• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குவைத்தில் போன தமிழ்நாட்டு மானம்.. அதிக வட்டிக்கு கடன்.. 24 பாஸ்போர்ட்டுகளுடன் சிக்கிய தம்பதி | Kuwait Tamil Nadu Couple Caught With 24 Passports.. High-Interest Loan Scam Exposed

GenevaTimes by GenevaTimes
August 18, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
குவைத்தில் போன தமிழ்நாட்டு மானம்.. அதிக வட்டிக்கு கடன்.. 24 பாஸ்போர்ட்டுகளுடன் சிக்கிய தம்பதி | Kuwait Tamil Nadu Couple Caught With 24 Passports.. High-Interest Loan Scam Exposed
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Hema Vandhana

Time
Published: Tuesday, August 18, 2026, 15:21 [IST]

குவைத் நகரம்: வளைகுடா நாடான குவைத்தில் தமிழ்நாட்டு மானம் கப்பலேறியுள்ளது.. வேலை தேடி சென்ற தமிழர்களை குறிவைத்து ஒரு ஜோடி அநியாயமாக வட்டி வசூலித்துள்ளது.. அதிக வட்டிக்கு கடன் வழங்கி வந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்த தம்பதியை அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதை பற்றி சுருக்கமாக இங்கே பார்போம்.

குவைத்தின் மன்கப் பகுதியில் உள்ள பிளாக்-3 என்ற அட்ரஸில் வசித்து வருகிறார்கள் அந்த தமிழகத் தம்பதியினர்.. இவர்கள் பிழைப்புக்காக குவைத் சென்றுள்ள தமிழர்களை இலக்காகக் கொண்டு, நீண்டகாலமாகவே மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ait Tamil Nadu Couple

அதிக வட்டி வசூலித்த தம்பதி

அதுமட்டுமல்லாமல், அவசர தேவைக்காக நாடி வருபவர்களுக்கு பல மடங்கு வட்டிக்குக் கடன் வழங்கிவிட்டு, அதற்குரிய பணத்தை தராதவர்களை அச்சுறுத்தும் வேலையிலும் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இவர்களின் முழுப்பெயர் மற்றும் வயது விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

பாதுகாப்பிற்காக பலரிடமிருந்தும் சட்டவிரோதமாக பெறப்பட்ட 24 பாஸ்போர்ட்டுகளை அவர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

24 பாஸ்போர்ட்கள்

குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் வட்டித் தொழில் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதையும் மீறிப் பல ஆண்டுகளாகவே இவர்கள் விசா வழங்கல் மற்றும் வட்டித் தொழிலைச் சட்டவிரோதமாகச் செய்து வந்துள்ளனர். கடன் கொடுத்ததற்கான உத்தரவாதமாக அப்பாவிகளின் பாஸ்போர்ட்டுகளைப் பறித்துத் தங்கள் கைவசம் வைத்துக்கொண்டு அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இந்த சட்டவிரோத செயல்கள் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில்தான் பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டு, இந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் குவைத்தில் செயல்படும் போலி ஆள்சேர்ப்பு நிறுவனங்கள் மற்றும் வாட்ஸ்-அப் குழுக்களின் முறையற்ற செயல்பாடுகளுக்கு எதிராக, உரிமம் பெற்ற நிறுவனங்கள் இந்தியத் தூதரகம் மற்றும் குவைத் குற்றப் புலனாய்வு துறையிடம் முறையான புகார்களை அளித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

EB ஆபீஸை அதிரவைத்த வைஷாலி.. இறங்கி அடித்த மின்வாரியம்.. ஆதாரத்துடன் மீண்டும் வந்த யூடியூப் தம்பதி

EB ஆபீஸை அதிரவைத்த வைஷாலி.. இறங்கி அடித்த மின்வாரியம்.. ஆதாரத்துடன் மீண்டும் வந்த யூடியூப் தம்பதி

இந்திய தூதரகம்

இப்போது கைது செய்யப்பட்டுள்ள தம்பதி மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய சம்பவங்கள் வெளிநாடுகளில் வாழும் இந்திய சமூகத்தின் நற்பெயரையும் பாதிக்கும் என்பதால், வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் இது போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் நேரடியாகத் தூதரகத்தை அணுகுவதே சரியான வழியாகும். இந்தத் தம்பதியின் கைது நடவடிக்கை இப்போது அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

ரயிலில் சூட்கேசில் இருந்த உடல்.. கூடவே சென்னை ஜவுளிக்கடை பை.. சென்ட்ரல் சிசிடிவியில் சிக்கிய தம்பதி!

ரயிலில் சூட்கேசில் இருந்த உடல்.. கூடவே சென்னை ஜவுளிக்கடை பை.. சென்ட்ரல் சிசிடிவியில் சிக்கிய தம்பதி!

வீட்டு வேலைக்கு ஆள்சேர்ப்பு

இப்படித்தான், கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட குவைத்தில் செயல்படும் சட்டவிரோத வீட்டு வேலை ஆள்சேர்ப்பு நிறுவனங்கள் மற்றும் வாட்ஸ்-அப் குழுக்களுக்கு எதிராக, குவைட்டிலுள்ள உரிமம் பெற்ற ஆள்சேர்ப்பு நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்தியத் தூதரகம், குவைத் சுகாதார அமைச்சகம் மற்றும் குவைத் குற்றப் புலனாய்வுத்துறை போன்ற அதிகாரப்பூர்வ அமைப்புகளிடம் எழுத்துப்பூர்வ புகார்களைத் தாக்கல் செய்திருந்தனர் என்ற செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

Kuwait Tamil Nadu Couple Caught With 24 Passports.. High-Interest Loan Scam Exposed

Read More

Previous Post

தேனிலவுக்கு உலங்கு வானூர்தியில் சென்ற பிரிட்டன் இளம் தம்பதிக்கு நேர்ந்த துயரம்

Next Post

கிரிப்டோ முதலீடு செய்கிறீர்களா? FIU விதிகள் மற்றும் புதிய வரி விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! | வணிகச் செய்திகள்

Next Post
கிரிப்டோ முதலீடு செய்கிறீர்களா? FIU விதிகள் மற்றும் புதிய வரி விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! | வணிகச் செய்திகள்

கிரிப்டோ முதலீடு செய்கிறீர்களா? FIU விதிகள் மற்றும் புதிய வரி விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin