• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

₹7 லட்சம் கடனுக்கு ₹80,000 செட்டில்மெண்ட்.. ஹெச்டிஎப்சி தந்த ஆஃபர்.. நெட்டிசன் பகிர்ந்த நிஜபதிவு | ₹80,000 settlement for a ₹7 lakh loan: HDFC’s offer – a real post shared by a netizen

GenevaTimes by GenevaTimes
August 10, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
₹7 லட்சம் கடனுக்கு ₹80,000 செட்டில்மெண்ட்.. ஹெச்டிஎப்சி தந்த ஆஃபர்.. நெட்டிசன் பகிர்ந்த நிஜபதிவு | ₹80,000 settlement for a ₹7 lakh loan: HDFC’s offer – a real post shared by a netizen
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Velmurugan P

Time
Published: Monday, August 10, 2026, 18:06 [IST]

சென்னை: இன்று எக்ஸ் தளபக்கத்தில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. அந்த பதிவில் அவர் கூறுகையில், “₹7 லட்சம் ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு நிலுவைத்தொகை, அதை வெறும் ₹80,000-க்கு முடித்துக் கொள்ள வங்கி தயாராக உள்ளது. என் நண்பர் கடந்த 8 ஆண்டுகளாக இதே கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வருகிறார்.

ஆனால், கடுமையான நிதி இழப்புகளைச் சந்தித்த பிறகு, அவரது நிலைமை மிகவும் கடினமானது; இதனால் இப்போது அவர் தனது 3-வது தவணையைச் செலுத்தத் தவறவிட்டுள்ளார்.

HDFC credit card

வங்கியின் வசூல் பிரிவு அவரைத் தொடர்புகொண்டு, “₹7 லட்சம் நிலுவையை ₹80,000-க்கு செட்டில் செய்து விடுங்கள். கணக்கு NPA (Non-Performing Asset) ஆவதற்கு முன்பாக ஒரு முடிவை எடுப்பது நல்லது” என்று கூறியுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது ஒரு நம்பமுடியாத சலுகையாகத் தோன்றுகிறது.

₹7 லட்சம் நிலுவைத்தொகை, வெறும் ₹80,000-க்கு செட்டில் செய்யப்படுகிறது. இது ₹6.20 லட்சம் தள்ளுபடி! ஆனால், அங்கிருந்துதான் உண்மையான கவலையே தொடங்குகிறது. செட்டில்மென்ட்டுக்குப் பிறகு அவரது கிரெடிட் ரிப்போர்ட்டிற்கு என்னவாகும்? எதிர்காலத்தில் கடன் அல்லது கிரெடிட் கார்டு பெறுவதை இது கடினமாக்குமா?

மேலும், அவர் இறுதியில் பாக்கித் தொகையைச் செலுத்தினால், இந்த “Settled” என்ற நிலையை நீக்க முடியுமா? கலெக்ஷன்ஸ் மேனேஜர், “நீங்கள் பின்னர் வட்டியுடன் பாக்கித் தொகையைச் செலுத்தி, உங்கள் சிபில் ஸ்கோரை மேம்படுத்திக் கொள்ளலாம்” என்று கூறுகிறார்.

அம்பத்தூர் நகைக் கடைகளில் தங்க நகைக்கு பதில் கவரிங் நகையை மாற்றி வைத்து திருட முயற்சி

அம்பத்தூர் நகைக் கடைகளில் தங்க நகைக்கு பதில் கவரிங் நகையை மாற்றி வைத்து திருட முயற்சி

ஆனால் பெரிய கேள்வி என்னவென்றால்: இவை அனைத்தும் எழுத்துப்பூர்வமாக உள்ளதா?

ஒரு நிதி நெருக்கடியின் போது, வெறும் வாய்மொழி வாக்குறுதியின் அடிப்படையில் மட்டும் உறவினர்களிடமிருந்து ₹80,000 கடன் வாங்குவது பாதுகாப்பான முடிவாக இருக்காது. மறுபுறம், தொடர்ந்து தவணைகளைச் செலுத்துவது சாத்தியமில்லை,

மற்றும் கணக்கு NPA-வை நோக்கி நகர்கிறது. எனவே, அவர் இரண்டு கடினமான தேர்வுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டதாகத் தெரிகிறது: இன்றே ₹80,000 ஏற்பாடு செய்து செட்டில் செய்வது, அல்லது தன்னால் முடிந்த பணத்தைச் சேமித்து, பிற வழிகளை ஆராய்ந்து, கணக்கு NPA ஆகும் ஆபத்தை எதிர்கொள்வது.

நீங்கள் அவர் இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்? செட்டில்மென்ட்டை ஏற்றுக்கொள்வீர்களா, அல்லது முதலில் வங்கியிடமிருந்து அனைத்தையும் எழுத்துப்பூர்வமாகப் பெற்றுக்கொண்டு பிற வழிகளை ஆராய்வீர்களா?” இவ்வாறு கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள நெட்டிசன் ஒருவர், “வங்கியுடன் செட்டில்மென்ட் செய்துவிடாதீர்கள். அப்படிச் செய்தால் எதிர்காலத்தில் உங்கள் நண்பரை சிபில் பிளாக்லிஸ்ட் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள் . அதன்பின்னர உடனடியாக உங்கள் நண்பர் வங்கி பக்கமே போக முடியாது.. இனி அவருக்குக் கடன்களோ , கிரெடிட் கார்டுகளோ எதுவுமே கிடைக்காது, எல்லாமே பூஜியம் ஆகிவிடும். வாழ்நாள் முழுக்க வங்கியில் கடன் என்று கேட்கவே முடியாது” என்று கூறியுள்ளார்.

திருப்பூரில் நட்பின் ஆழத்தை உணர்த்தி செல்லப்பிராணி: மனிதர்களை நெகிழ வைத்த தெருநாய்

திருப்பூரில் நட்பின் ஆழத்தை உணர்த்தி செல்லப்பிராணி: மனிதர்களை நெகிழ வைத்த தெருநாய்

இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில் கூறுகையில், “இது ஒரு நல்ல வாய்ப்பு. HDFC பொதுவாகத் தீர்வுக்கான (settlement) கடிதங்களை மின்னஞ்சல் மூலமாகவும், அஞ்சல் வழியாகவும் அனுப்புகிறது. கடன் மீட்பு முகவரின் (recovery agent) மின்னஞ்சல் முகவரி அதிகாரப்பூர்வமானதா என்பதை எப்போதும் சரிபாருங்கள்; தீர்வுச் சலுகைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம். கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன் கணக்குகளும் தீர்வு காணப்பட்ட பிறகு, CIBIL ஸ்கோரை மேம்படுத்திக்கொள்ள முடியும்; அத்துடன் எதிர்காலத்தில் புதிய கடன்களையோ அல்லது கிரெடிட் கார்டுகளையோ பெறவும் முடியும்” என்று கூறியுள்ளார்.

மூன்றாவதாக ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், பணத்தைச் செலுத்துவதற்கு ஈடாக ‘முழு மற்றும் இறுதித் தீர்வு’ குறித்த கடிதத்தைப் பெறும் வரை, வேறு எதையும் செலுத்த வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள். அந்த முகவர் அவரை ஏமாற்றிப் பணத்தைப் பறிக்கப் பார்க்கிறார். வங்கியின் அதிகாரப்பூர்வமான ‘முழு மற்றும் இறுதித் தீர்வு’ திட்டத்தின் கீழ் இதைச் செய்யாவிட்டால், வெறும் பணத்தைச் செலுத்துவதால் மட்டும் அவரது சிபில் ஸ்கோர் மேம்படப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

English summary

₹7 lakh in HDFC Credit Card dues, and the bank is ready to settle it for just ₹80,000.My friend has been using the same Credit Card for the last 8 years.But after suffering heavy financial losses, his situation became so difficult that he has now missed his third payment. The bank’s Collections Team contacted him and said “Settle the ₹7 lakh dues for ₹80,000. It’s better to make a decision before the account becomes NPA.”

Read More

Previous Post

மலேசியாவிலிருந்து ஆபத்தான நபர்களை ஏற்றிய சிறிலங்கன் எயார் லைன்ஸ் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது

Next Post

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.. இந்திய அணியின் ப்ளேயிங் 11 இல் இடம்பெறும் வீரர்கள் யார்? | கிரிக்கெட் செய்திகள்

Next Post
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.. இந்திய அணியின் ப்ளேயிங் 11 இல் இடம்பெறும் வீரர்கள் யார்? | கிரிக்கெட் செய்திகள்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.. இந்திய அணியின் ப்ளேயிங் 11 இல் இடம்பெறும் வீரர்கள் யார்? | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin