Last Updated:
கேரள உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறையினருக்கு தொடர் மிரட்டல் விடுத்து வந்த பிரபல ரவுடி, அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். “முடிந்தால் என்னைப் பிடித்து பார்” என சவால் விடுத்து ஆட்டம் காட்டியவரை சிறையில் அடைத்த சம்பவத்தின் பின்னணி என்ன?
கேரளாவிற்கே நான் தான் டான். அமைச்சர் எல்லாம் தூசி. போலீஸ் எல்லாம் வெற்று காகிதம். இப்படி கெத்து வசனம் பேசி அதிகாரிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்து வந்த பிரபல ரவுடி, ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாகப் பதுங்கி, ஆட்டம் காட்டி வந்தவருக்கு எண்டு கார்டு போடப்பட்டதன் பின்னணி?


