சேனக்க பல்லேதென்ன சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள அனுபவம் கொண்ட அதிகாரி ஆவார்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம், இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடக நடவடிக்கைகள், சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய முக்கிய அறிவிப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தகவல்களை ஊடகங்கள் ஊடாக தெளிவாகத் தெரிவிக்கும் பொறுப்பு இனி சேனக்க பல்லேதென்னவிடம் வழங்கப்பட்டுள்ளது.
சேனக்க பல்லேதென்ன சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள அனுபவம் கொண்ட அதிகாரி ஆவார்.
இவர் இதற்கு முன்னர் மஹர சிறைச்சாலை அத்தியட்சகராகவும், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பயிற்சிப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இதன்மூலம் சிறைச்சாலை நிர்வாகம், கைதிகளின் மறுவாழ்வு மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட துறைகளில் அவருக்கு அனுபவம் உள்ளது.
சேனக்க பல்லேதென்ன, காலி ரிச்மண்ட் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான கல்வியில் டிப்ளோமா படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.
மேலும், இந்தியாவின் கேரளாவில் மறுவாழ்வு மற்றும் சீர்திருத்த முகாமைத்துவம் தொடர்பான டிப்ளோமா படிப்பையும் அவர் பயின்றுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான பல்வேறு டிப்ளோமா மற்றும் பயிற்சி கற்கைகளை இந்தியா, தாய்லாந்து, மலேசியா, மாலைதீவு மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளில் அவர் தொடர்ந்து பயின்றுள்ளார்.

