• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பெந்தோங்கில் காரின் மீது மரம் விழுந்த விபத்து: 4 குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்த 5 வயதுச் சிறுவன் நலமுடன் தேறி வருகிறான்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பெந்தோங்கில் காரின் மீது மரம் விழுந்த விபத்து: 4 குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்த 5 வயதுச் சிறுவன் நலமுடன் தேறி வருகிறான்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குவாந்தான்:

பெந்தோங் அருகே காரின் மீது மரம் முறிந்து விழுந்த கோர விபத்தில், தனது பெற்றோர் உள்ளிட்ட 4 குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்து உயிர் தப்பிய 5 வயதுச் சிறுவன் முகமட் ரிஸ் ஹாஸிக் தற்போது தெமர்லோ, சுல்தான் ஹாஜி அகமட் ஷா மருத்துவமனையில் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

முகம் மற்றும் தலைப் பகுதியில் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ள அச்சிறுவனின் உடல்நிலைத் தேறி வருவதாகப் பஹாங் மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் சைஃபுல் அஸ்லான் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.

ஜான்டா பைக் அருகேயுள்ள பழைய கோலாலம்பூர் -பெந்தோங் சாலையில் ‘ஃபோர்ட் ரேஞ்சர் ராப்டர்’ வாகனத்தில் குடும்பத்தினருடன் பயணித்துக் கொண்டிருந்தபோது இக்கோர விபத்து நிகழ்ந்தது.

இவ்விபத்தில் மாரான் தொகுதி அம்னோ இளைஞரணித் தலைவர் முகமட் ராட்ஸி ரஹிமி அவரது மனைவி நூரைனி முகமட் ஜாஃப்ரி (வயது 36) சிறுவனின் இரட்டைச் சகோதரனான முகமட் ரிஸ் ஹாஸிம் (வயது 5) சிறுவனின் தாய்மாமன் முகமட் நிஜாம் முகமட் ஜாஃப்ரி (வயது 35) ஆகிய நான்கு பேரின் சடலங்களும் நேற்று தெமர்லோவிலுள்ள ‘கம்போங் பாயா லூவாஸ்’ மசூதியில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுத் தயாராக்கப்பட்டன.

பகாங் முதலமைச்சர் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் அங்கு வருகை தந்து, தாய்-தந்தையை இழந்து தவித்த சிறுவன் ரிஸ் ஹாஸிக்கைக் கையில் ஏந்தியபடி ஆறுதல் கூறிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பின்னர், நான்கு பேரின் உடல்களும் மாரான், ஸ்ரீ செடுங் முஸ்லிம் மயானத்தில் ஒரே கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

தாய்-தந்தையை இழந்துள்ள சிறுவன் ரிஸ் ஹாஸிக்கை இனி யார் பராமரிப்பது என்பது குறித்து அவனது தாயாரின் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் எனச் சிறுவனின் தாத்தா ரஹிமி அப்துல் சமத் (வயது 63) தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

Pension Scheme | மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும்.. அசத்தல் பென்ஷன் திட்டம்..! | வணிகம் போட்டோகேலரி

Next Post

உதயநிதி ஸ்டாலினை சிறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : திருமாவளவன் தெரிவிப்பு

Next Post
உதயநிதி ஸ்டாலினை சிறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : திருமாவளவன் தெரிவிப்பு

உதயநிதி ஸ்டாலினை சிறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : திருமாவளவன் தெரிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin