• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உதயநிதி ஸ்டாலினை சிறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : திருமாவளவன் தெரிவிப்பு

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உதயநிதி ஸ்டாலினை சிறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : திருமாவளவன் தெரிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழக சட்டமன்றம் நாளை (05) கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் விஜய்யை தரக்குறைவாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக, திருமாவளவன் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்ட பதிவில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ‘இரட்டுற மொழிதல்’ என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.

தேசிய அளவிலான பிரச்சினை



எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே முதலமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது, ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர்.

அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ‘இரட்டுற மொழிதல்’ என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே…

— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 4, 2026

அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு – கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது.



எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் ‘எள்ளல் நடையில்’ பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும்.

ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.

நாளை கூடவுள்ள சட்டமன்றம்


சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட – தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும்.

உதயநிதி ஸ்டாலினை சிறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : திருமாவளவன் தெரிவிப்பு | Udhayanidhi Stalin Arrested Thirumavalavan X Post



நாளை (05) சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும்.



தற்போதைய நிலையில், காவிரிநீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும்; இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பெந்தோங்கில் காரின் மீது மரம் விழுந்த விபத்து: 4 குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்த 5 வயதுச் சிறுவன் நலமுடன் தேறி வருகிறான்! | Makkal Osai

Next Post

உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல.. அப்படி பேசினால் மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.. ஸ்டாலின் | Udhayanidhi is not someone who speaks inadvertently; he is someone inclined to apologize: MK Stalin

Next Post
உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல.. அப்படி பேசினால் மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.. ஸ்டாலின் | Udhayanidhi is not someone who speaks inadvertently; he is someone inclined to apologize: MK Stalin

உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல.. அப்படி பேசினால் மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.. ஸ்டாலின் | Udhayanidhi is not someone who speaks inadvertently; he is someone inclined to apologize: MK Stalin

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin