இத்திட்டத்தின் கீழ், அமைப்புசாராத் துறைத் தொழிலாளர்கள் 60 வயதை எட்டிய பிறகு மாதம் ரூ.3,000 ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். 18 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இத்திட்டத்தில் இணையலாம். எனினும், அவர்களின் மாத வருமானம் ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும், மத்திய அரசு பங்களிப்பு செய்யும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஊழியர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC) அல்லது தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றில் அவர்கள் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது. வருமான வரி செலுத்துவோரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியற்றவர்கள் ஆவர்.


