• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யோஷித – கரன்னாகொடவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யோஷித – கரன்னாகொடவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, அழைப்பாணை கிடைக்கப் பெற்றதும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

இதன்போது, சந்தேகநபர்களான யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

யோஷித - கரன்னாகொடவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! | Yoshitha Karannagoda Ordered To Appear Colombo Hc



இதனைத் தொடர்ந்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்ட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (03) 8 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பிரித்தானிய அரச கடற்படை கல்லூரி


வசந்த கரன்னாகொட கடற்படைத் தளபதியாகப் பணியாற்றிய 2006 செப்டம்பர் 1 முதல் 2007 ஜூன் 8 வரையிலான காலப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் யோஷித ராஜபக்ச பிரித்தானியாவில் உள்ள ‘ பிரித்தானிய அரச கடற்படை கல்லூரியில்’ பயிற்சி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அரசுக்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

யோஷித - கரன்னாகொடவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! | Yoshitha Karannagoda Ordered To Appear Colombo Hc



குறித்த பயிற்சியில் பங்குபற்றுவதற்கான தகுதிகள் இல்லாத நிலையிலும் நடைமுறைகளை மீறி யோஷித ராஜபக்ச முறையற்ற விதத்தில் அரச நிதியிலான இந்த சலுகையைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட காதலியின் கல்லறையில் இளைஞர் தற்கொலை

Next Post

உதயநிதி ஸ்டாலின் கைது.. இனிப்பு கொடுத்து கொண்டாடும் தவெக.. களத்தில் இறங்கிய விஜய் தொண்டர்கள்! | Udhayanithi Stalin: TVK Cadres Celebrate Udhayanidhi Stalin’s Arrest by Distributing Sweets in Tenkasi

Next Post
உதயநிதி ஸ்டாலின் கைது.. இனிப்பு கொடுத்து கொண்டாடும் தவெக.. களத்தில் இறங்கிய விஜய் தொண்டர்கள்! | Udhayanithi Stalin: TVK Cadres Celebrate Udhayanidhi Stalin’s Arrest by Distributing Sweets in Tenkasi

உதயநிதி ஸ்டாலின் கைது.. இனிப்பு கொடுத்து கொண்டாடும் தவெக.. களத்தில் இறங்கிய விஜய் தொண்டர்கள்! | Udhayanithi Stalin: TVK Cadres Celebrate Udhayanidhi Stalin's Arrest by Distributing Sweets in Tenkasi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin