• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட காதலியின் கல்லறையில் இளைஞர் தற்கொலை

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. அதேவேளை, காசாவில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர், பொதுமக்கள் என 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனிடையே, 2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியபோது இஸ்ரேலின் நிவக் பாலைவனம் பகுதியில் கிப்ருஸ் ரிம் பகுதியில் சூப்பர் நோவா இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீதும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இசைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் 370 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த இசைநிகழ்ச்சியில் பார் அஸ்ரப் (வயது 30) தனது காதலியான லிரோன் பர்டாவுடன் பங்கேற்றார். அப்போது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் லிரோன் பர்டா படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் எல்கனா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவால் காதலி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் பார் அஸ்ரப் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.

காதலியின் கல்லறை முன் தற்கொலை

இந்நிலையில், பார் அஸ்ரப் நேற்று எல்கனா நகரில் அடக்கம் செய்யப்பட்ட தனது காதலி லிரோன் பர்டாவின் கல்லறைக்கு சென்றார். அங்கு காதலியின் படுகொலையால் கடந்த 2 ஆண்டுகளுக்குமே மிகுந்த மன உளைச்சலில் இருந்த பார் அஸ்ரப் காதலி லிரோன் பர்டாவின் கல்லறை முன் நின்று துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று பார் அஸ்ரப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேலில் அக்டோபர் 7ல் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காதல் ஜோடிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட காதலியின் கல்லறையில் இளைஞர் தற்கொலை appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

இன்று பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை – உங்கள் பகுதி பட்டியலில் உள்ளதா? முழு விவரங்கள் இதோ! – Sri Lanka Tamil News

Next Post

யோஷித – கரன்னாகொடவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Next Post
யோஷித – கரன்னாகொடவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

யோஷித - கரன்னாகொடவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin