Last Updated:
2030 காமன்வெல்த் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும். நிறைவு விழாவில் கொடி, செங்கோல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவில், காமன்வெல்த் கொடியும், செங்கோலும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
2010ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய இந்தியா, தற்போது 2030ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகளை நடத்தவுள்ளது. அதன்படி, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவில், காமன்வெல்த் கொடியும், செங்கோலும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் காமன்வெல்த் கொடியையும், செங்கோலையும் பெற்றுக் கொண்டனர்.
2030 காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் 15 முதல் 17 விளையாட்டுப் பிரிவுகள் இடம்பெறும் என காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்துவதன் மூலம் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Delhi,Delhi,Delhi
Aug 03, 2026 12:41 PM IST


