Last Updated:
பெய்ஜிங்கில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டியில் இவை பங்கேற்க உள்ளன.
சீனாவில் நடைபெற்று வரும் ஏஐ மாநாட்டில் புதிய திறன்கள் மூலம் பார்வையாளர்களை ரோபோக்கள் வியக்க வைத்தன.
அந்நாட்டின் ஷாங்காயில் நடப்பு ஆண்டுக்கான உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நுணுக்கமான செயல்களை துல்லியமாகச் செய்யும் மனித உருவ ரோபோக்கள் கவனம் ஈர்த்தன. அதிநவீன தொடு உணர்வு தொழில்நுட்பம் கொண்ட ரோபோக்கள், சீன பாரம்பரிய எழுத்துகளை எழுதுதல், கையால் நூடுல்ஸ் தயாரித்தல், சாப்ஸ்டிக்ஸ் பயன்படுத்துதல் போன்ற செயல்களை மனிதர்களைப் போல துல்லியமாகச் செய்து அசத்தின.
மேலும், சீனாவின் பல்வேறு பகுதிகளில் தேயிலை பறித்து, தேயிலை கேக் தயாரிக்கும் ரோபோக்களின் வீடியோக்களும் அங்கு திரையிடப்பட்டன. டிராகன் படகுப் போட்டி, குதிரை சவாரி உள்ளிட்டவற்றிலும் ஈடுபட்டு ரோபோக்கள் அசத்தின.
பெய்ஜிங்கில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டியில் இவை பங்கேற்க உள்ளன.
Jul 22, 2026 10:53 AM IST


