Last Updated:
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை நீடிப்பதைக் பொறுத்து, வரும் நாட்களில் அணைகளுக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால், கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 574 கன அடியாக இருந்த நீர்வரத்து 15 ஆயிரத்து 198 கன அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் இந்த அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்ந்துள்ளது.
ன்
மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 12,694 கனஅடியாக இருந்த நீர்வரத்து, சற்று குறைந்து 12,312 கன அடியாக உள்ளது. 124 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 87.5 அடியாக உயர்ந்துள்ளது.
ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி அணைக்கு நீர்வரத்து 15,646 கன அடியாக இருந்த நிலையில், 11,470 கன அடியாகக் குறைந்துள்ளது. அதேபோல், ஹாரங்கி அணைக்கான நீர்வரத்தும் 2,751 கன அடியாக சரிந்துள்ளது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை நீடிப்பதைக் பொறுத்து, வரும் நாட்களில் அணைகளுக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


