Last Updated:
தென் கொரியாவில் பல கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து வரும் நிலையில், அதற்கு ரோபோக்கள் தீர்வாகியுள்ளன.
தென் கொரியாவில் அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க உணவு விற்பனையகங்களில் ரோபோக்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.
அந்நாட்டின் தலைநகர் சியோல் உள்பட நாடு முழுவதும் உள்ள காபி கடைகள், ராமென் (Ramen) உணவகங்கள், மலர்க் கடைகளில் Baris என்ற ரோபோக்கள், வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, லவுஞ்ச் எக்ஸ் நிறுவனம் தென் கொரியா முழுவதும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஆளில்லாத 8 ரோபோடிக் காபி கடைகளை நடத்தி வருகிறது.
Unstaffed coffee shops, ramen eateries and flower outlets are spreading across South Korea as owners turn to robots and self-service to overcome rising labor costs in a business model that relies on the widespread honesty of users https://t.co/YHS7kOU8zr pic.twitter.com/Kx4pvOed1u
— Reuters (@Reuters) July 2, 2026
மனிதர்கள் நடத்தும் கடைகளை விட, இந்த ரோபோக்கள் நடத்தும் கடைகளில் ஊழியர்களுக்கான செலவு மிச்சமாவதால், கடையின் ஒட்டுமொத்த லாபம் 40 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக அதன் சிஇஓ கிம் டோங்ஜின் தெரிவித்துள்ளார். அந்நாட்டு தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் இறுதியிலேயே தென் கொரியாவில் ஊழியர்கள் இல்லாத கடைகளின் எண்ணிக்கை சுமார் 9,000 ஆக இருந்தது. கடந்த ஆண்டு இத்தகைய கடைகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


