• Login
Wednesday, July 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்க அதிபரான பிறகு டிரம்பின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட் | How Much Wealth Donald Trump Has Gained Since Becoming U.S. President

GenevaTimes by GenevaTimes
July 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்க அதிபரான பிறகு டிரம்பின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட் | How Much Wealth Donald Trump Has Gained Since Becoming U.S. President
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க அதிபரான பிறகு டிரம்பின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

டொனால்ட் டிரம்ப் கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார். இந்த ஒன்றரை ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது தான் உலகம் முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பதவியை பயன்படுத்தி பங்குச்சந்தை முதலீடுகளை மேற்கொண்டு லாபம் பார்க்கிறார் என குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க அரசு டிரம்பின் சொத்து மதிப்பு தொடர்பான அரசின் நிதி ஆவணங்கள் (Federal financial disclosures) வெளியாகியுள்ளன. 927 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணத்தில் 2024இல் 622 மில்லியன் டாலர்களாக உயர்ந்த டிரம்பின் சொத்து மதிப்பு 2025இல் மட்டும் 2.2 பில்லியன் என அதிகாரித்துள்ளது என்கிறது. அந்த வகையில் டிரம்பின் மொத்த சொத்து மதிப்பு 6.5 பில்லியன் டாலர்களாக உயர்வு கண்டுள்ளது.

அமெரிக்க அதிபரான பிறகு டிரம்பின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

டிரம்பின் சொத்து மதிப்பு உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது கிரிப்டோகரன்சியில் அவர் மேற்கொண்ட முதலீடுகள் தான் என தெரிய வந்துள்ளது. டிரம்ப் கடந்த ஆண்டு மட்டும் கிரிப்டோ வணிகங்கள் மூலம் சுமார் 1.2 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளதாக நிதி ஆவணங்கள் காட்டுகின்றன. குறிப்பாக World Liberty Financial மற்றும் CIC Digital LLC போன்ற நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்ட கிரிப்டோ டோக்கன்கள் மற்றும் ‘மீம்’ காயின்கள் விற்பனையில் அவர் பெரும் லாபம் ஈட்டியுள்ளார்.

டிரம்ப் கிரிப்டோவுக்கு ஆதரவானவர் என்பதால் அவர் பதவியேற்ற உடனே கிரிப்டோ கரன்சி மதிப்பு உயர்ந்தது. ஆனால் தற்போது இந்த சந்தையே வீழ்ச்சியில் இருக்கிறது. இருந்தாலும் இதில் தான் டிரம்ப் அதிக லாபம் பார்த்துள்ளார் என தரவுகள் கூறுகின்றன.கிரிப்டோ கரன்சிகளை தாண்டி, டிரம்பின் பாரம்பரிய வணிகமான ரியல் எஸ்டேட்டும் இந்த ஆண்டில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் புதிய ஹோட்டல் மற்றும் சொகுசு குடியிருப்புத் திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான டாலர்களை அவர் வருமானமாகப் பெற்றுள்ளார்.

குறிப்பாக, ஃபுளோரிடாவில் உள்ள அவரது ‘மார்-ஏ-லாகோ’ கிளப் மூலம் மட்டும் 77 மில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது. இது அவர் அதிபராவதற்கு முந்தைய ஆண்டை விட 50% அதிகம் ஆகும். அமெரிக்க வரலாற்றில் எந்த அதிபரும் பதவியில் இருக்கும்போது இவ்வளவு பெரிய அளவில் தனது சொந்த வணிகங்களில் லாபம் ஈட்டியதில்லை என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முன்னதாக இருந்த அதிபர்கள், சர்ச்சைகளை தவிர்க்க தங்கள் சொத்துக்களை ‘பிளைண்ட் டிரஸ்ட்’ மூலம் நிர்வகித்து வந்தனர். ஆனால், டிரம்ப் தனது வணிகங்களை தன் பிள்ளைகளின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, அரசின் கொள்கை முடிவுகளுக்கும் டிரம்பின் வணிக நலன்களுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்குவதாக அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்காவுடன் வர்த்தகம், ராணுவ உதவி மற்றும் கட்டணங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகளிலேயே டிரம்பின் வணிகங்கள் விரிவடைவதையும் அவர் சுட்டிக்காட்டுகின்றனர்.பல்வேறு நிதி கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் போர்ப்ஸ் போன்ற இதழ்களின் மதிப்பீட்டின்படி, 2024-ல் சுமார் 2.3 பில்லியன் டாலராக இருந்த டிரம்பின் சொத்து மதிப்பு, தற்போது 6.5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.ஏற்கனவே ஈரான் போரை வைத்து டிரம்ப் கேள்பிளிங் செய்து அவரது நிறுவனங்கள் மூலம் பல லட்சம் கோடி லாபம் பார்த்தால் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் டிரம்ப் தரப்பு அதனை மறுத்தது.

Share This Article

English summary

How Much Wealth Donald Trump Has Gained Since Becoming U.S. President

அமெரிக்க அதிபரான பிறகு டிரம்பின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்- Donald Trump’s wealth has reportedly surged since returning to the White House, driven largely by cryptocurrency gains, family business income, and renewed value in his brand-linked assets.

Story first published: Wednesday, July 1, 2026, 15:43 [IST]

Other articles published on Jul 1, 2026

Read More

Previous Post

Ethanol Policy | எத்தனால் கலப்பு திட்டம், பரிசோதனை அளவில்தான் உள்ளதா? மத்திய அரசு பதில்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Venezuela | நொடிகளில் சீட்டுக்கட்டு போல சரிந்த கட்டடங்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்! | வெனிசுலா நிலநடுக்கம் | World News (உலக செய்திகள்)

Next Post
Venezuela | நொடிகளில் சீட்டுக்கட்டு போல சரிந்த கட்டடங்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்! | வெனிசுலா நிலநடுக்கம் | World News (உலக செய்திகள்)

Venezuela | நொடிகளில் சீட்டுக்கட்டு போல சரிந்த கட்டடங்கள்... வெளியான அதிர்ச்சி தகவல்! | வெனிசுலா நிலநடுக்கம் | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin