தனது உணவகப் பணியாளர் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்த பிரபல கொத்து உணவக (Mr Kottu ) உரிமையாளர் செவ்வாய்க்கிழமை (30) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சந்தேகநபரான உணவக உரிமையாளரை தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உணவக உரிமையாளர் தனது உணவகத்தில் பணிபுரிபவர் ஒருவரை உடல்ரீதியாகத் தாக்கும் சிசிடிவி (CCTV) காட்சிகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (30) காலை மஹரகம காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


