செலவும் மிச்சம்! 28 நாள் வேலிடிட்டியும் கிடைக்கும்! ஜியோவின் ரூ.189 பிளான் பற்றி தெரியுமா?
2024-ஆம் ஆண்டில் ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் இணைந்து ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தன. அதன் பிறகும் ஒரு சில டெலிகாம் நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்தன. டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் பிளான்களில் பெரும்பாலானவை தினசரி டேட்டாவை வழங்கும் பிளான்களாகும். ஆனால் ஒரு சில வாடிக்கையாளர்கள் உண்மையிலேயே இந்த டேட்டாவை அதிகம் பயன்படுத்துவதில்லை.
அப்படிப்பட்டவர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ ஒரு சிறப்பான பிளானைக் கொண்டு வந்துள்ளது. சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க ரீசார்ஜ் செய்பவர்கள் இந்த பிளானை பயன்படுத்தலாம்.
ரூ.189 பிளான்: ஜியோவின் ரூ.189 பிளான் மொத்தமாகவே 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஒரு சில பிளான்களுக்கு தினசரி அடிப்படையில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஆனால் இந்த பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். இதற்கு 2 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் ரூ.189 பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி, ஜியோ டிவி ஆகியவையும் கிடைக்கிறது.

அவ்வப்போது இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிளான் ஏற்றதாக இருக்கும். 2ஜிபி டேட்டாவை நீங்கள் தீர்த்துவிட்டால் அதன் பிறகு இன்டர்நெட் வேகம் 64kbps ஆக மாறிவிடும். பின்னர் நீங்கள் டேட்டா பயன்படுத்த தனியாக டேட்டா பேக்குகளை ரீச்சார்ஜ் செய்ய வேண்டும். ஜியோ ரூ.199 பிளானையும் வழங்குகிறது.
ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்களுக்கு மட்டுமே. இந்த 18 நாட்களுக்கும் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். இதற்கு எக்ஸ்ட்ரா OTT வசதி எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால் 4ஜி டேட்டா கிடைப்பதால், வேகம் அதிகமாக இருக்கும். வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு திட்டங்களில் எது ஏற்றதோ அதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஒரு சிலர் இன்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துவார்கள். விலையும் குறைவாக அதே சமயத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா பெற வேண்டுமானால் ரூ.199 பிளான் சரியாக இருக்கும். டேட்டா அதிகம் தேவையில்லை.. வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் வசதி இருந்தால் போதும் என்று எண்ணுபவர்களுக்கு ரூ.189 பிளான் ஏற்றது. சிலர் ஜியோ வழங்கும் ரூ.349 பிளானை ரீசார்ஜ் செய்து வருகின்றனர். ரூ.349 பிளான் 28 நாள் வேலிடிட்டி கொண்டது. இதற்கு அன்லிமிடெட் கால் வசதி, தினமும் இரண்டு ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஒரு சிலர் இந்த இரண்டு ஜிபி டேட்டாவை அதிகம் பயன்படுத்துவதே இல்லை. அப்படிப்பட்டவர்கள் இந்த ரூ.189 பிளானுக்கு மாறலாம்.
