தங்கம் விலையில் நடந்த அதிசயம்!! வாரத்தின் முதல்நாளே இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கல!!
தமிழ்நாட்டில் தொடர்ந்து ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த வந்த தங்கம் இந்த வாரத்தில் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிசய நிகழ்வாக தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை மாற்றமில்லாமல் இருக்கிறது.
வழக்கமாக வாரத்தின் முதல் நாள் தங்கம் விலையில் மாற்றம் இருக்கும். பெரும்பாலும் முதல் நாள் போக்கு தான் வாரம் முழுவதுமே காணப்படும். ஆனால் இன்று தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை என பிரதான நகரங்களில் தங்கம் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது.தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,08,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜூன் ஒன்றாம் தேதி நிலவரத்தோடு ஒப்பிடும்போது ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 900 ரூபாயும் ஒரு சவரனுக்கு 7,200 ரூபாயும் சரிவடைந்து இருக்கிறது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை தங்கம் விலை 6.21% சரிவை சந்தித்துள்ளது.சனிக்கிழமை அன்று தங்கம் விலை உயர்வு கண்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று விலை மாறவில்லை, அதே போல திங்கள்கிழமையான இன்று தங்கம் விலை மாறாமல் சனிக்கிழமை விலைக்கே விற்கப்படுகிறது.
24 கேரட் தங்கமும் விலை மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 14,837 ரூபாய்க்கும் 10 கிராம் 1,48,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 11,370 ரூபாய்க்கும் ஒரு சவரன் 90,960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இன்றைய தினம் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை ஒரு கிராம் 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் அமைதி பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் இருதரப்பும் முரண்பாடுகளுக்கு மத்தியில் பங்கேற்றுள்ளன. சுமூகமாக பேச்சுவார்த்தை நடக்கவில்லை. மத்தியஸ்தர்கள் விடாப்பிடியாக பிடித்து இருதரப்பினரையும் பேச வைத்து வருகின்றனர். இதனால் தங்க சந்தையிலும் இழுபறி நிலை காணப்படுகிறது. இதனால் தான் தமிழ்நாட்டில் தங்கம் விலை மாற்றமில்லாமல் இருக்கிறது.
இனி வரும் நாட்களில் ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் எந்த திசையில் செல்ல போகிறதோ அதற்கேற்ப தான் தங்கம் விலையின் போக்கும் இருக்கும். அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் தங்கம் விலை உயரும், இல்லை என்றால் ஒரு வித இழுபறியுடனே தங்கம் விலை காணப்படும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

