• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

”என் செல்வாக்கை பத்தி நீங்க கவலைப்படாதீங்க..” ட்ரம்பை மீண்டும் விட்டு விளாசிய மெலானி! | Donald Trump – Meloni Clash Escalates as Italian PM Rejects ‘Begged for Photo’ Claim

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
”என் செல்வாக்கை பத்தி நீங்க கவலைப்படாதீங்க..” ட்ரம்பை மீண்டும் விட்டு விளாசிய மெலானி! | Donald Trump – Meloni Clash Escalates as Italian PM Rejects ‘Begged for Photo’ Claim
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Mani Singh S

Time
Published: Saturday, June 20, 2026, 23:54 [IST]

வாஷிங்டன்: இத்தாலி பிரதமர் மெலோனி – அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே மீண்டும் வார்த்தை யுத்தம் அதிகரித்துள்ளது. மெலோனி தன்னிடம் புகைப்படம் எடுக்க கெஞ்சியதாக டிரம்ப் கூறியதற்கு பதிலடி கொடுத்து இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுக்க மீண்டும் மீண்டும் கேட்டதாகவும், இத்தாலியில் அவரது செல்வாக்கு சரிவை சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

பிரான்சில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள், ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது இத்தாலி பிரதமர் மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுத்து கொள்ள கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒரு பேட்டியில் தெரிவித்தார். டிரம்பின் இந்த கருத்தை மெலோனி திட்டவட்டமாக மறுத்தார்.

Donald Trump - Meloni Clash Escalates as Italian PM Rejects Begged for Photo Claim

எதற்காகவும் கெஞ்ச மாட்டோம்

இது தொடர்பாக மெலோனி கூறுகையில், “டிரம்பின் பேச்சுகள் முற்றிலும் புனையப்பட்டவை. நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து உள்ளேன். அமெரிக்க அதிபர் ஏன் தனது சொந்த நட்பு நாடுகளிடம் இத்தகைய முறையில் நடந்துகொள்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. இது நடப்பது முதல் முறையுமல்ல. மேற்கத்திய நாடுகளின் எதிரிகள் மற்றும் அமெரிக்காவின் எதிரிகள் விஷயத்தில் அவர் இத்தகைய உறுதியைக் காட்டாதது வருத்தமளிக்கிறது.

தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி

தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி

மாறாக, சில குறிப்பிட்ட தலைவர்களிடம் அவர் மிகவும் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கிறார். டிரம்ப் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், இத்தாலியும் நானும் எதற்காகவும் கெஞ்ச மாட்டோம்” என்றார். மெலோனியின் இந்த கருத்தால் கடுப்பான டிரம்ப், தனது சமூக வலைத்தளத்தில் மீண்டும் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

தன்னிடம் “நட்பாக” இருக்க விரும்புகிறார்

டிரம்ப் கூறுகையில், “இத்தாலியில் மெலோனியின் மக்கள் செல்வாக்கு பெருமளவு குறைந்து வருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் விவகாரத்தில், இத்தாலியை உண்மையிலேயே நேசிக்கும் நாடான அமெரிக்காவை அவர் நிராகரித்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம். அதேபோல நேட்டோவும் செய்தது!” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

ஈரானுடனான மோதலில், நட்பு நாடான அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்காமல் ஈரானுக்கு ஆதரவாக இத்தாலி நின்றதாக மெலோனியை டிரம்ப் நேரடியாகக் குற்றம் சாட்டினார். மேலும், ஈரான் போர் நடைபெற்றபோது அமெரிக்கா இத்தாலியின் விமான ஓடுதளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்ததாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இத்தாலி உட்பட பல நேட்டோ நட்பு நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்கா ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி டாலர்களைச் செலவழித்தாலும், எங்களுக்கு அவர்கள் விமான ஓடுதளங்களைக்கூட பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இது எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மெலோனி தனது செல்வாக்கை மீட்டெடுக்கும் நோக்கில் மீண்டும் தன்னிடம் “நட்பாக” இருக்க விரும்புகிறார்.

டிரம்புடன் போட்டோ எடுத்துக்கொள்ள கெஞ்சினாரா.. இத்தாலி பிரதமர் மெலோனி? வீடியோ வெளியிட்டு மறுப்பு

டிரம்புடன் போட்டோ எடுத்துக்கொள்ள கெஞ்சினாரா.. இத்தாலி பிரதமர் மெலோனி? வீடியோ வெளியிட்டு மறுப்பு

“என்னுடைய பிரபலத்தைப் பொறுத்தவரை, நீங்கள் எனது நண்பராக இருப்பது அதற்கு எந்த உதவியும் செய்யவில்லை. மேலும், எனது பிரபலம் உங்களுடனான உறவைச் சார்ந்தும் இல்லை. இத்தாலியின் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் எனது திறமையைத்தான் எனது பிரபலம் சார்ந்துள்ளது. அதைத்தான் நான் எப்போதும் செய்து வந்திருக்கிறேன். எப்படியிருந்தாலும், எனது பிரபலம் உங்கள் கவலைக்குரிய விஷயம் அல்ல. அதற்கு பதிலாக, உங்கள் சொந்த பிரபலத்தைப் பற்றியே நீங்கள் கவனம் செலுத்துங்கள் என்று நான் பரிந்துரைக்கிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

English summary

Donald Trump – Meloni Clash: A fresh war of words has erupted between Donald Trump and Italian Prime Minister Giorgia Meloni. Trump claimed Meloni repeatedly requested a photograph with him during the G7 Summit, while Meloni dismissed the allegation as fabricated and insisted that neither she nor Italy ever begs.

Read More

Previous Post

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை…! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Next Post

85 நாட்களில் பம்பர் மகசூல்… விவசாயிகளை ஆச்சரியப்படுத்தும் ‘APB 04’ கம்பு… | Agriculture News (விவசாய செய்திகள்)

Next Post
85 நாட்களில் பம்பர் மகசூல்… விவசாயிகளை ஆச்சரியப்படுத்தும் ‘APB 04’ கம்பு… | Agriculture News (விவசாய செய்திகள்)

85 நாட்களில் பம்பர் மகசூல்... விவசாயிகளை ஆச்சரியப்படுத்தும் ‘APB 04’ கம்பு... | Agriculture News (விவசாய செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin