• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

85 நாட்களில் பம்பர் மகசூல்… விவசாயிகளை ஆச்சரியப்படுத்தும் ‘APB 04’ கம்பு… | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
85 நாட்களில் பம்பர் மகசூல்… விவசாயிகளை ஆச்சரியப்படுத்தும் ‘APB 04’ கம்பு… | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 20, 2026 4:57 PM IST

வறட்சியையும் வெப்பத்தையும் தாங்கி, 85 நாட்களில் ஏக்கருக்கு 1100 கிலோ வரை மகசூல் தரும் ‘APB 04’ புதிய கம்பு ரகம் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

News18
News18

வறட்சியைத் தாங்கி, வெறும் 85 நாட்களில் ஏக்கருக்கு 1100 கிலோ வரை மகசூல் தரக்கூடிய புதிய ரக கம்பு பயிரை, விழுப்புரம் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வானூர் வட்டாரத்தின் தைலாபுரம் கிராமத்தில், முன்னோடி விவசாயி ஹரிராம் என்பவரின் 2 ஏக்கர் நிலத்தில் ‘ஏ.பி.வி.04’ (APB 04) என்ற புதிய ரக கம்பு விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பண்ணையை விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜமுனா மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் மதனகுமாரி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ‘ஏ.பி.வி.04’ கம்பு ரகம் இரும்புச் சத்து மற்றும் துத்தநாகச் சத்து இயற்கையாகவே அதிகளவில் கொண்ட உயிர்ச்சத்து செறிவூட்டப்பட்ட (Bio-fortified) ரகமாகும். இதனால் மனிதர்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய உதவுவதுடன், ரத்தசோகை போன்ற குறைபாடுகளைத் தடுக்கவும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கம்பு ரகத்தின் ஆயுட்காலம் வெறும் 85 நாட்கள் மட்டுமே என்பதால், குறுகிய காலத்தில் அதிக மகசூல் பெற விரும்பும் விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றதாகும். கடுமையான வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையையும் தாங்கி வளரும் திறன் கொண்ட இந்த ரகம், காரீப் பருவ சாகுபடிக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. இந்த புதிய ரக கம்பு ஏக்கருக்கு 1100 கிலோ வரை மகசூல் தரக்கூடிய திறன் கொண்டதாகவும், விவசாயிகளுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரக்கூடியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விதைப்பண்ணையின் வளர்ச்சி மற்றும் தரம் குறித்து விவசாயி ஹரிராமிடம் கேட்டறிந்த வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் கூறுகையில், “இந்த புதிய கம்பு ரகம் காரீப் பருவம் மற்றும் ஆடிப்பட்ட சாகுபடிக்கு மிகவும் உகந்ததாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் ஆடிப்பட்ட பருவத்தில் தமிழக விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார். இந்த ஆய்வின்போது, வானூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ், துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், முன்னோடி விவசாயிகள் சேதுராமன், அன்பு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

”என் செல்வாக்கை பத்தி நீங்க கவலைப்படாதீங்க..” ட்ரம்பை மீண்டும் விட்டு விளாசிய மெலானி! | Donald Trump – Meloni Clash Escalates as Italian PM Rejects ‘Begged for Photo’ Claim

Next Post

மரணத்தை ஏற்படுத்திய விபத்தில் தொடர்புடைய ஓட்டுநருக்கு 6 போக்குவரத்து அபராதங்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். – Malaysiakini

Next Post

மரணத்தை ஏற்படுத்திய விபத்தில் தொடர்புடைய ஓட்டுநருக்கு 6 போக்குவரத்து அபராதங்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin