• Login
Wednesday, June 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கேளையாடு வேட்டை: இருவருக்கு 180,000 ரூபாய் அபராதம்

GenevaTimes by GenevaTimes
June 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கேளையாடு வேட்டை: இருவருக்கு 180,000 ரூபாய் அபராதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




இலங்கையின் வனவிலங்கு சட்டங்களின் கீழ் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட விலங்கினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புள்ளிமானை (கேளையாடு – Barking Deer) கொன்று, இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு  நீதிமன்றம் மொத்தம் 180,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


நுவரெலியா வன அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் ஹக்கல வனவிலங்கு சரணாலயப் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் இணைந்து கடந்த ஜூன் 5ஆம் திகதி நாணுஓயா, பரகும்புர பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டனர். இதன்போதே இச்சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.


இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து நான்கு கிலோகிராம் புள்ளிமான் இறைச்சி, விலங்கின் தலை மற்றும் தோல் ஆகியவற்றுடன், வனவிலங்குகளைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 30 கம்பிப் பாசுகளும்   அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.


‘இந்தியன் முன்ட்ஜாக்’ (Indian Muntjac) அல்லது ‘கேளையாடு’ (Barking Deer) என்று அழைக்கப்படும் இந்த விலங்கினம், வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின்  கீழ் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட பாலூட்டியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் கடந்த ஜூன் 8ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதிமன்றம் அவர்களுக்கு 180,000 ரூபாவை அபராதமாக விதித்துத் தீர்ப்பளித்தது.


வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகளான வனவிலங்கு தளப் பாதுகாவலர் ஏ.எம்.சி. மதுரங்க, வனவிலங்கு தள உதவியாளர் ஏ.எம்.எஸ்.கே. ஆலோக பண்டார, வனவிலங்கு ஒழுங்குபடுத்துநர் ஆர். தனுஷ்க ஹலம்பகே, கள உதவியாளர்களான வி.எம்.எஸ்.எஸ். ஸ்ரீ சஞ்சீவ, பி. அஜித் சாந்த மற்றும் சாரதி எஸ்.என்.பி. டி சில்வா ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.



Read More

Previous Post

PN கூட்டணியில் PAS தற்போதைக்கு நீடிக்கும் – ஷாஹிதான் 

Next Post

நேருவின் பொதுத்துறை நிறுவனங்கள் முதல் மோடியின் ஸ்டார்ட்அப்கள் வரை: இந்திய வர்த்தக உலகில் ஏற்பட்ட வரலாற்றுப் புரட்சி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
நேருவின் பொதுத்துறை நிறுவனங்கள் முதல் மோடியின் ஸ்டார்ட்அப்கள் வரை: இந்திய வர்த்தக உலகில் ஏற்பட்ட வரலாற்றுப் புரட்சி! | India News (இந்தியா செய்திகள்)

நேருவின் பொதுத்துறை நிறுவனங்கள் முதல் மோடியின் ஸ்டார்ட்அப்கள் வரை: இந்திய வர்த்தக உலகில் ஏற்பட்ட வரலாற்றுப் புரட்சி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin