Last Updated:
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரை சதம் விளாசி அசத்தினார்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 564 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
நியூ சண்டிகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 368 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கில் 103 ரன்களுடனும், பந்த் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷுப்மன் கில் 177 பந்துகளில் 126 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ரிஷப் பந்த் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த துருவ் ஜூரல் 19 ரன்களுக்கும், மானவ் சுதர் 28 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரை சதம் விளாசி அசத்தினார்.
இந்திய அணி 127 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்களை எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. வாஷிங்டன் சுந்தர் 52 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


