ஈரானியப் படைகளுடன் இரவில் நடத்தப்பட்ட பதிலடித் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக தற்காப்புத் தாக்குதல் நடத்தியதாக சென்ட்காம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,
பாலிஸ்டிக் ஏவுகணை
“ஈரான் தனது பிராந்திய அண்டை நாடுகளை நோக்கி பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது.

இருப்பினும், அவை அனைத்தும் குறிவைத்த இலக்குகளைத் தாக்கத் தவறின.
குவைத்தை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஈரானிய ஏவுகணைகள் இலக்கை அடையாமல் சென்றன. அல்லது வழியிலேயே உடைந்து சிதறின.
மேலும் பஹ்ரைனை நோக்கி ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்புப் படைகளால் உடனடியாக இடைமறிக்கப்பட்டன,” என்று சென்ட்காம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

