• Login
Wednesday, May 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

“மெலடி” சாக்லேட் கொடுத்த ட்ரீட்: பெயர் குழப்பத்தால் பங்குச் சந்தையில் எகிறிய பார்லே இண்டஸ்ட்ரீஸ்! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
May 20, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
“மெலடி” சாக்லேட் கொடுத்த ட்ரீட்: பெயர் குழப்பத்தால் பங்குச் சந்தையில் எகிறிய பார்லே இண்டஸ்ட்ரீஸ்! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 20, 2026 7:24 PM IST

பெயர் குழப்பத்தால் ஒரு பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்த இந்த விசித்திரமான நிகழ்வு தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பிரதமர் மோடி - இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி
பிரதமர் மோடி – இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரின் சந்திப்பு மற்றும் அதைத் தொடர்ந்து உருவான “மெலடி” (Melody) என்ற இணையதள மீம்ஸ் ட்ரெண்ட், இந்தியப் பங்குச்சந்தையில் ஒரு சுவாரசியமான மற்றும் விசித்திரமான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் மெலோனிக்கு இந்தியாவின் புகழ்பெற்ற “மெலடி” சாக்லேட்டுகளை பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோவை இத்தாலி பிரதமர் மேலோனி வெளியிட, அந்த நிகழ்வு இணையத்தில் வைரலானது.

இந்த வைரல் தருணத்தை அடுத்து, சமூக ஊடகங்களில் மெலடி சாக்லேட்டின் புகழ்பெற்ற விளம்பர வாசகமான “Melody itni chocolaty kyun hai” என்பது போன்ற பல மீம்கள் பரவத் தொடங்கின. அதைத் தொடர்ந்து சாக்லேட் விற்பனை அதிகரிக்கும் என்ற நோக்கில் சில்லறை முதலீட்டாளர்கள் பலரும் பங்குச்சந்தையில் “பார்லே” (Parle) என்ற பெயர் கொண்ட நிறுவனத்தின் பங்குகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கத் தொடங்கினர்.

இதன் காரணமாக, மும்பை பங்குச்சந்தையில் (BSE) ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீத அப்பர் சர்க்யூட்டை  எட்டி, ரூ. 5.25 ஆக உயர்ந்தது.

இருப்பினும், இந்த முதலீட்டு எழுச்சியின் பின்னணியில் ஒரு பெரிய தவறு நடந்துள்ளது. முதலீட்டாளர்கள் வாங்கிய ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ (Parle Industries) நிறுவனத்திற்கும், மெலடி சாக்லேட்டுகளை தயாரிக்கும் ‘பார்லே புராடக்ட்ஸ்’ (Parle Products) நிறுவனத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பெயரில் உள்ள ஒற்றுமை காரணமாக, முதலீட்டாளர்கள் தவறான நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளனர்.

இது குறித்து சிஎன்பிசி-டிவி18  ஊடகத்திற்குப் பேட்டியளித்த பார்லே புராடக்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மயங்க் ஷா, பிரதமர் மோடியின் இந்த செயல் இந்திய தயாரிப்புகளை உலகளாவிய மேடைக்குக் கொண்டு செல்லும் ஒரு சிறந்த முயற்சி என்று பாராட்டியுள்ளார். மேலும், தங்களது மெலடி சாக்லேட்டுகள் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனையாகி வருவதாகவும், தற்போதைய சூழலில் தங்களது நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், அது ஒரு தனியார் நிறுவனமாகவே தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதமரின் இந்த வைரல் செயல் தங்களது உண்மையான பார்லே புராடக்ட்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விற்பனையை மேலும் பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெயர் குழப்பத்தால் ஒரு பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்த இந்த விசித்திரமான நிகழ்வு தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

“மெலடி” சாக்லேட் கொடுத்த ட்ரீட்: பெயர் குழப்பத்தால் பங்குச் சந்தையில் எகிறிய பார்லே இண்டஸ்ட்ரீஸ்!

Read More

Previous Post

மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் : இந்திய பெருங்கடலில் ஈரானின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது அமெரிக்கா

Next Post

மக்காவில் 5 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, சவூதி விசாரணையை அரசு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது | Makkal Osai

Next Post
மக்காவில் 5 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, சவூதி விசாரணையை அரசு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது | Makkal Osai

மக்காவில் 5 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, சவூதி விசாரணையை அரசு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin