ஜெட்டா: ஹஜ் அனுமதிகள் இல்லாமல் மக்காவிற்குள் நுழைய முயன்றதற்காக ஐந்து மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சவூதி அரேபிய அதிகாரிகள் நடத்தும் விசாரணையின் முடிவை புத்ராஜெயா எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இவ்விவகாரம் தொடர்பாக அரசு மேலதிக தகவல்களைத் தேடி வருவதாக மத விவகார அமைச்சர் சுல்கிஃப்லி ஹசன் கூறினார்.
இன்று இங்கு நடைபெற்ற 2026 மாபெரும் ஹஜ் கருத்தரங்கில் கலந்துகொண்ட பிறகு சுருக்கமாகக் கூறிய அவர், “நாங்கள் இன்னும் விசாரணைக்காகக் காத்திருக்கிறோம்” என்றார். முன்னதாக, மலைப்பாங்கான பாலைவனப் பள்ளத்தாக்குகள் வழியாக சட்டவிரோதமாக மக்காவிற்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் ஐந்து மலேசியர்கள் கைது செய்யப்பட்டதாக சவூதி அரேபிய செய்தி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.



