Last Updated:
இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த பழைய கட்டமைப்பு மாறப் போகிறது என்பது உறுதியாகியுள்ளது.
125 நாட்கள் வேலை வழங்கும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கு மாற்றாக ‘விபி ஜி ராம் ஜி’ என்ற திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த சட்டம் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எ திர்ப்புக்கு இடையே நிறைவேறியது.
இந்நிலையில் புதிய விபி ஜிராம் ஜி திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்றும், தற்போதுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் விதிமுறைகளை படிப்படியாக மாற்றியமைக்கும் என்றும் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த பழைய கட்டமைப்பு மாறப் போகிறது என்பது உறுதியாகியுள்ளது. இந்த புதிய திட்டமானது கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம் அளிக்கும் என்றும் சட்டம் முழுமையாக அமலாகும் வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் அனைத்து தற்போதைய விதிகளும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


