Rule of 72’ என்பது, நீங்கள் முதலீடு செய்த தொகை எத்தனை ஆண்டுகளில் இரண்டு மடங்காக மாறும் என்பதை கணக்கிட உதவும் ஒரு எளிய கணித விதி. உதாரணமாக, ஒருவர் ரூ.5 லட்சம் முதலீடு செய்திருந்தால், அது எப்போது ரூ.10 லட்சமாக மாறும் என்பதை இந்த விதி மூலம் அறியலாம். குமார் என்பவர் ரூ.5 லட்சத்தை நிலையான வைப்பு (Fixed Deposit) திட்டத்தில் முதலீடு செய்கிறார் என கொள்ளலாம். அந்த முதலீட்டிற்கு ஆண்டுக்கு 8% வட்டி கிடைத்தால், 72-ஐ 8-ஆல் வகுக்க வேண்டும் (72 ÷ 8 = 9). இதன் மூலம், அந்த முதலீடு 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ.10 லட்சமாக மாறும் என்பது தெளிவாகிறது.


