Last Updated:
புதுச்சேரியில் ஆட்சியை தக்க வைத்த நிலையில், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி,
ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் கைலாசநாதனிடம் வழங்கினார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றது. இதையடுத்து, ரங்கசாமி மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இந்த நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். வியாழக்கிழமை காலை துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் விரைவில் பதவியேற்பார் என்று தெரிவித்தார்.
Puducherry (Pondicherry)


